Singers : S. Janaki, Malasiya Vasudevan and Vijayaramani

Music by : M. S. Vishwanathan

Female : Maegam thiraludhadi
Minniruttu kammudhadi
Innum karukkudhadi
Eesaana moolaiyilae

Chorus : Naam kumbittomae

Female : Mandhaiyilae maariyaayi
Mala maela maayavarae
Indhirarae sooriyarae
Ippa mazhai peiya vaenum

Chorus : Ippa mazhai peiya vaenum

Male : Maegam thiraludhadi
Minniruttu kammudhadi
Innum karukkudhadi
Eesaana moolaiyilae

Chorus : Naam kumbittomae

Male and Chorus : Mandhaiyilae maariyaayi
Mala maela maayavarae
Indhirarae sooriyarae
Ippa mazhai peiya vaenum

Female : Chittiraiyil paarthu vittom
Chella mazhai peiyavillae

Chorus : Chella mazhai peiyavillae

Male : Aippasiyil paarthuvittom
Adai mazhai peiyavillae

Chorus : Adai mazhai peiyavillae

Both : Ammaavae jekkammaavae
Un kannu pattaa
Summaavae peiyum paaraen….

Chorus : Ammaavae jekkammaavae
Un kannu pattaa
Summaavae peiyum paaraen

Chorus : Maegam thiraludhadi
Minniruttu kammudhadi
Innum karukkudhadi
Eesaana moolaiyilae
Eesaana moolaiyilae

Male : Aa…. matta malai aiyanaarae
Maavootthu vaelavarae
Mazhaiya yerakki vidu vandha
Pasi theertthu vaikka
Ammaadi muthu maari un kannu pattaa
Maasathukku moonu maari

Chorus : Un kannu pattaa
Maasathukku moonu maari

Chorus : Maegam thiraludhadi
Minniruttu kammudhadi
Innum karukkudhadi
Eesaana moolaiyilae
Eesaana moolaiyilae

Female : Oosi pola minni minni
Oor sezhikka peiyum mazhai
Vaasalilae peiya vaiyammaa
Yae jekkammaa vaanam paartha
Bhoomi idhammaa

Chorus : Yae jekkammaa vaanam paartha
Bhoomi idhammaa

Female : Yaer pidikkum thambi ellaam
Yaengi yaengi nikkaaga

Chorus : Aang….yaengi yaengi nikkakaaga

Female : Kaar velaiya seiya vaenumae
Yae jekkammaa karisakkaadu velaiya vaenumae

Chorus : Yae jekkammaa karisakkaadu
Velaiya vaenumae

Female : Vaeliyila kala parichu
Veral neraiya koppalangal
Yaezhiyaiyum thoonga vittomae
Yae jekkammaa veragu vetti vaazha vandhomae

Chorus : Yae jekkammaa veragu vetti
Vaazha vandhomae

Male : Pathu varushamadi
Pachcha thanni paarthadhillae
Muthu muthaa peiya venumae yae jekkammaa
Yaeri kulam neraiya vaenumae

Chorus : Yae jekkammaa yaeri kulam
Neraiya vaenumae

Female : Maegam thiraludhadi
Minniruttu kammudhadi
Innum karukkudhadi
Eesaana moolaiyilae

Chorus : Eesaana moolaiyilae

Male : Panjan keda paavan keda
Yengun kodi manjal vara
Pongum nadhi vellam varanum
Nalla maanam madhi dhaanam keda
Maarum kalai gnaanam kedum
Thonumbadi vellam varanum….m
Thonumbadi vellam varanum

Chorus : Thonumbadi vellam varanum….
Thonumbadi vellam varanum

Female : Adi amma unai kaettomadi
Kammaakkarai neerodida
Un paarvaiyum ingae varanum
Nee thottaa sugam vittaa pasi
Kottaa vidu kittaadhadi
Kottum mazhai kondae tharanum
Kottum mazhai kondae tharanum

Chorus : Kottum mazhai kondae tharanum
Kottum mazhai kondae tharanum

Female : Maegam thiraludhadi
Minniruttu kammudhadi
Innum karukkudhadi
Eesaana moolaiyilae

Chorus : Naam kumbittomae
Mandhaiyilae maariyaayi
Mala maela maayavarae
Indhirarae sooriyarae
Ippa mazhai peiya vaenum
Ippa mazhai peiya vaenum

Chorus : Lu lu lu lu lu lu….
Lu lu lu lu lu lu….

பாடகர்கள் : எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் மற்றும் விஜயரமணி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : மேகம் திரளுதடி
மின்னிருட்டுக் கம்முதடி
இன்னும் கருக்குதடி
ஈசான மூலையிலே

குழு : நாம் கும்பிட்டோமே

பெண் : மந்தையிலே மாரியாயி
மலை மேலே மாயவரே
இந்திரரே சூரியரே
இப்ப மழை பெய்ய வேணும்

குழு : இப்ப மழை பெய்ய வேணும்

ஆண் : மேகம் திரளுதடி
மின்னிருட்டுக் கம்முதடி
இன்னும் கருக்குதடி
ஈசான மூலையிலே

குழு : நாம் கும்பிட்டோமே

ஆண் மற்றும் குழு : மந்தையிலே மாரியாயி
மலை மேலே மாயவரே
இந்திரரே சூரியரே
இப்ப மழை பெய்ய வேணும்

பெண் : சித்திரையில் பார்த்துவிட்டோம்
செல்ல மழை பெய்யவில்லே

குழு : செல்ல மழை பெய்யவில்லே

ஆண் : ஐப்பசியில் பார்த்துவிட்டோம்
அடை மழை பெய்யவில்லே

குழு : அடை மழை பெய்யவில்லே

இருவர் : அம்மாவே ஜெக்கம்மாவே
உன் கண்ணுப்பட்டா
சும்மாவே பெய்யும் பாரேன்

குழு : அம்மாவே ஜெக்கம்மாவே
உன் கண்ணுப்பட்டா
சும்மாவே பெய்யும் பாரேன்

குழு : மேகம் திரளுதடி
மின்னிருட்டுக் கம்முதடி
இன்னும் கருக்குதடி
ஈசான மூலையிலே
ஈசான மூலையிலே

ஆண் : ஆ….மட்ட மலை ஐய்யனாரே
மாவூத்து வேலவரே
மழைய எறக்கிவிடு வந்த
பசி தீர்த்து வைக்க
அம்மாடி முத்துமாரி உன் கண்ணுபட்டா
மாசத்துக்கு மூணு மாரி

குழு : உன் கண்ணுபட்டா
மாசத்துக்கு மூணுமாரி

குழு : மேகம் திரளுதடி
மின்னிருட்டுக் கம்முதடி
இன்னும் கருக்குதடி
ஈசான மூலையிலே
ஈசான மூலையிலே

பெண் : ஊசி போல மின்னி மின்னி
ஊர் செழிக்க பெய்யும் மழை
வாசலிலே பெய்ய வைய்யம்மா
ஏ ஜெக்கம்மா வானம் பார்த்த
பூமி இதம்மா

குழு : ஏ ஜெக்கம்மா வானம் பார்த்த
பூமி இதம்மா

பெண் : ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம்
ஏங்கி ஏங்கி நிக்காக

குழு : ஆங்…. ஏங்கி ஏங்கி நிக்காக

பெண் : கார் வெளைய செய்ய வேணுமே
ஏ ஜெக்கம்மா கரிசக்காடு வெளைய வேணுமே

குழு : ஏ ஜெக்கம்மா கரிசக்காடு
வெளைய வேணுமே

பெண் : வேலியில களைபறிச்சு
வெரல் நெறைய கொப்பளங்கள்
ஏழியையும் தூங்க விட்டோமே
ஏ ஜெக்கம்மா வெறகு வெட்டி வாழ வந்தோமே

குழு : ஏ ஜெக்கம்மா வெறகு வெட்டி
வாழ வந்தோமே

ஆண் : பத்து வருஷமடி
பச்ச தண்ணி பாத்ததில்லே
முத்து முத்தா பெய்ய வேணுமே ஏ ஜெக்கம்மா
ஏரி குளம் நெறைய வேணுமே

குழு : ஏ ஜெக்கம்மா
ஏரி குளம் நெறைய வேணுமே

பெண் : மேகம் திரளுதடி
மின்னிருட்டுக் கம்முதடி
இன்னும் கருக்குதடி
ஈசான மூலையிலே

குழு : ஈசான மூலையிலே

ஆண் : பஞ்சங் கெட பாவங் கெட
எங்குங் கொடி மஞ்சள் வர
பொங்கும் நதி வெள்ளம் வரணும்
நல்ல மானம் மதி தானம் கெட
மாறும் கலை ஞானம் கெடும்
தோணும் படி வெள்ளம் வரணும்….ம்
தோணும் படி வெள்ளம் வரணும்

குழு : தோணும் படி வெள்ளம் வரணும்….ம்
தோணும் படி வெள்ளம் வரணும்

பெண் : அடி அம்மா உனைக் கேட்டோமடி
கம்மாக்கர நீரோடிட
உன் பார்வையும் இங்கே வரணும்
நீ தொட்டா சுகம் விட்டா பசி
கொட்டா விடு கிட்டாதடி
கொட்டும் மழை கொண்டே தரணும்
கொட்டும் மழை கொண்டே தரணும்

குழு : கொட்டும் மழை கொண்டே தரணும்
கொட்டும் மழை கொண்டே தரணும்

பெண் : மேகம் திரளுதடி
மின்னிருட்டுக் கம்முதடி
இன்னும் கருக்குதடி
ஈசான மூலையிலே

குழு : நாம் கும்பிட்டோமே
மந்தையிலே மாரியாயி
மலை மேலே மாயவரே
இந்திரரே சூரியரே
இப்ப மழை பெய்ய வேணும்
இப்ப மழை பெய்ய வேணும்

குழு : லு லு லு லு லு லு….
லு லு லு லு லு லு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here