Singer : Dr. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamai Pithan

Male : Magarndham paaloorum aravindham un paadham
Sree krishna gopalanae
Sree devi manavalanae

Male : Magarndham paaloorum aravindham un paadham
Sree krishna gopalanae
Sree devi manavalanae

Male : Pullanguzhalin isaiyinilae
Bhuvanam urangum amaidhiyilae
Pullanguzhalin isaiyinilae
Bhuvanam urangum amaidhiyilae

Male : Malai mel thavazhum aruvigalum
Malai mel thavazhum aruvigalum
Mayangum nilaiyil nindrikkum

Male : Alaipaayum kadal ezhum
Alaiyaamal isai ketkkum
Aaaaaa
Alaipaayum kadal ezhum
Alaiyaamal isai ketkkum
Paravaigal naduvaanil
Parakkamal thuyil maevum

Male : Vaaraai en govardhana kanna
Boologa parivarthana
Vaaraai en govardhana kanna
Boologa parivarthana

Male : Kaal vaitha idamellam poovagumae
Kai veitha idamellam thaenoorumae
Sarpangal nee thoonga paayagumae
Thalattu pazhaali thaayaagumae

Male : Karunai pozhiyum kaarmugilae
Kavalai panikkor maamarundhae
Karunai pozhiyum kaarmugilae
Kavalai panikkor maamarundhae

Male : Nayanam irandum pangajamo
Nayanam irandum pangajamo
Thulabam manakkum ambujamoo

Male : Ani vannam kaliyaadha
Manivannan unai naanae
Kana neram thavaradhu
Kavippadi thozhudhaenae

Male : En raaga aalabanai kanna
Un paadha aaradhanai
En raaga aalabanai kanna
Un paadha aaradhanai
En raaga aalabanai kanna
Un paadha aaradhanai

பாடகர் : டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

ஆண் : மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்
ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே
கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண் : மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்
ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே
கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண் : புல்லாங்குழலின் இசையினிலே
புவனம் உறங்கும் அமைதியிலே
புல்லாங்குழலின் இசையினிலே
புவனம் உறங்கும் அமைதியிலே

ஆண் : மலை மேல் தவழும் அருவிகளும்
மலை மேல் தவழும் அருவிகளும்
மயங்கும் நிலையில் நின்றிருக்கும்
மயங்கும் நிலையில் நின்றிருக்கும்

ஆண் : அலைபாயும் கடல் ஏழும்
அலையாமல் இசை கேட்கும்..ஆஆஆஆ.
அலைபாயும் கடல் ஏழும்
அலையாமல் இசை கேட்கும்
பறவைகள் நடுவானில்
பறக்காமல் துயில் மேவும்

ஆண் : வாராய் என் கோவர்த்தனா கண்ணா
பூலோக பரிவர்த்தனா
வாராய் என் கோவர்த்தனா கண்ணா
பூலோக பரிவர்த்தனா

ஆண் : கால் வைத்த இடமெல்லாம் பூவாகுமே
கை வைத்த இடமெல்லாம் தேனூறுமே
சர்ப்பங்கள் நீ தூங்க பாயாகுமே
தாலாட்டு பாலாழி தாயாகுமே

ஆண் : கருணை பொழியும் கார்முகிலே
கவலைப் பிணிக்கோர் மாமருந்தே
கருணை பொழியும் கார்முகிலே
கவலைப் பிணிக்கோர் மாமருந்தே

ஆண் : நயனம் இரண்டும் பங்கஜமோ
நயனம் இரண்டும் பங்கஜமோ
களபம் மணக்கும் அம்புஜமோ

ஆண் : அணி வண்ணம் கலையாத
மணிவண்ணன் உனை நானே
கண நேரம் மறவாமல்
கவிப்பாடி தொழுதேனே

ஆண் : என் ராக ஆலாபனை கண்ணா
உன் பாத ஆராதனை
என் ராக ஆலாபனை கண்ணா
உன் பாத ஆராதனை
என் ராக ஆலாபனை கண்ணா
உன் பாத ஆராதனை…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here