Singers : S. P. Balasubrahmanyam, Malaysia Vasudevan and P. Susheela

Music by : Shankar Ganesh

Male : Maharani therilae maharajan nerilae
Oorgolamaai nee pogavae naan paaduven
Malar konjam thoovi mana pennai vaazhthi
Malar konjam thoovi mana pennai vaazhthi
Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa

Female : Illaiyendru sonnom
Adhu illaiyendru vandhaai
Naan unnai vaazhthi paada
En kannil konden vaarthai

Female : Illaiyendru sonnom
Adhu illaiyendru vandhaai
Naan unnai vaazhthi paada
En kannil konden vaarthai

Female : Puthu baarangal
Konjam ilaipaarungal
Nenjil puthu baarangal
Konjam ilaipaarungal
Mudindha kadhaikku
Thodakkam ini yedhu

Female : Maharajan therilae maharani nerilae
Oorgolamaai nee pogavae naan paaduven
Namakkaaga naamae dhisai maattri kondaal
Namakkaaga naamae dhisai maattri kondaal
Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa

Male : Vaazhkai enbadhu nadagam illai
Vandhadhum ponadhum vedangal illai
Ullathaal pillaigal neengal
Vaazhkai enbadhu nadagam illai
Vandhadhum ponadhum vedangal illai
Ullathaal pillaigal neengal

Male : Aanadhu aagattum marandhu
Ponadhu kidaithathu magizhndhu
Aanandha vaazhvai nee thodangu
Thodakkam varum munn mudivai thodalaama

Male : Maharani therilae maharajan nerilae
Oorgolamaai nee pogavae naan paaduven
Dhisai maarinaalae nalam undu endraal
Dhisai maarinaalae nalam undu endraal
Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa

Male : Paadhai podum nadhigal
Pin payanam pogum karaigal
Nadhigal pogum thaniyaaga
Karaigal vaazhum nilaiyaaga

Male : Paadhai podum nadhigal
Pin payanam pogum karaigal
Nadhigal pogum thaniyaaga
Karaigal vaazhum nilaiyaaga

Female : Oru aagayathil
Aadum tharisangu naan
Oru aagayathil
Aadum tharisangu naan
Irandu vizhiyil irandu baavama

Both : Maharani therilae maharajan nerilae
Oorgolamaai nee pogavae naan paaduven

Female : Namakkaaga naamae dhisai maattri kondaal
Namakkaaga naamae dhisai maattri kondaal
Merkkae udhikkum sooriyan
Male : Merkkae udhikkum sooriyan
Merkkae udhikkum sooriyan aa aa aa aa haa haa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், மலேஷியா வாசுதேவன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மகாராணி தேரிலே மகாராஜன் நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்
மலர் கொஞ்சம் தூவி மணப் பெண்ணை வாழ்த்தி
மலர் கொஞ்சம் தூவி மணப் பெண்ணை வாழ்த்தி
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா….

பெண் : இல்லையென்று சொன்னோம் அது
இல்லையென்று வந்தாய்
நான் உன்னை வாழ்த்தி பாட என்
கண்ணில் கொண்டேன் வார்த்தை

பெண் : இல்லையென்று சொன்னோம் அது
இல்லையென்று வந்தாய்
நான் உன்னை வாழ்த்தி பாட என்
கண்ணில் கொண்டேன் வார்த்தை

பெண் : புது பாரங்கள் கொஞ்சம்
இளைப்பாறுங்கள் நெஞ்சில்
புது பாரங்கள் கொஞ்சம் இளைப்பாறுங்கள்
முடிந்த கதைக்கு தொடக்கம் இனியேது

பெண் : மகாராஜன் தேரிலே மகாராணி நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்
நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால்
நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால்
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா….

ஆண் : வாழ்க்கை என்பது நாடகமில்லை
வந்ததும் போனதும் வேடங்கள் இல்லை
உள்ளத்தால் பிள்ளைகள் நீங்கள்
வாழ்க்கை என்பது நாடகமில்லை
வந்ததும் போனதும் வேடங்கள் இல்லை
உள்ளத்தால் பிள்ளைகள் நீங்கள்

ஆண் : ஆனது ஆகட்டும் மறந்து
போனது கிடைத்தது மகிழ்ந்து
ஆனந்த வாழ்வை நீ தொடங்கு
தொடக்கம் வரும் முன் முடிவை தொடலாமா

ஆண் : மகாராஜன் தேரிலே மகராணி நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்
திசை மாறி சென்றால் நலமுண்டு என்றால்
திசை மாறி சென்றால் நலமுண்டு என்றால்
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா….

ஆண் : பாதை போடும் நதிகள் பின்
பயணம் போகும் கரைகள்
நதிகள் போகும் தனியாக
கரைகள் வாழும் நிலையாக

ஆண் : பாதை போடும் நதிகள் பின்
பயணம் போகும் கரைகள்
நதிகள் போகும் தனியாக
கரைகள் வாழும் நிலையாக

பெண் : ஒரு ஆகாயத்தில் ஆடும்
திரிசங்கு நான்
இரண்டு விழியில் இரண்டு பாவமா

இருவர் : மகராணி தேரிலே மகாராஜன் நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன்

பெண் : நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால்
நமக்காக நாமே திசை மாற்றிக் கொண்டால்
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா….

ஆண் : மேற்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்கும் சூரியன் ஆஹாஹஹா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here