Singers : K. J. Yesudas and B. S. Sasireka

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : ……………….

Male : Malaisaaralil ilam poonguyil
Adhan maarbinil oru aan kuyil
Malaisaaralil ilam poonguyi
Adhan maarbinil oru aan kuyil
Adhu naanallavaa thunai neeyallavaa
Antha geedham naam paadum nallallavaa

Male : Malaisaaralil ilam poonguyil
Adhan maarbinil oru aan kuyil
Adhu naanallavaa thunai neeyallavaa
Antha geedham naam paadum nallallavaa

Female : ………………….

Male : Eeraezhu jenmathin pantham idhu
Oru izhaikkooda piriyaatha sontham
Idhu deiveegam pennaaga near vanthathu
Enthan thiruveedhi vazhi thedi thaer vanthathu

Male : Thodum uravaanathu thodarkadhaiyaanathu
Intha naatham kalaiyaatha isaiyaanathu

Male : Malaisaaralil ilam poonguyil
Adhan maarbinil oru aan kuyil
Adhu naanallavaa thunai neeyallavaa
Antha geedham naam paadum nallallavaa

Female : ……………..

Male : Pani thoongum malarae un madi enbathu
Iru kani thoongum thaen thiraatchai kodi enbathu
Ninaiththaalum anaiththaalum kodhikkindrathu
Adhil naan thaedum inbangal udhikindrathu

Male : Vizhi sirikkindrathu kavi padikkindrathu
Thirumaeni thaalaamal nadikkindrathu

Male : Malaisaaralil ilam poonguyil
Adhan maarbinil oru aan kuyil
Adhu naanallavaa thunai neeyallavaa
Antha geedham naam paadum nallallavaa

Both : ……………..

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ……………………..

ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

பெண் : …………………………..

ஆண் : ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழைக்கூட பிரியாத சொந்தம்
இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது

ஆண் : தொடும் உறவானது தொடர்கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது

ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

பெண் : …………………………..

ஆண் : பனி தூங்கும் மலரே உன் மடி என்பது
இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது

ஆண் : விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது

ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here