Singer : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Malaigalil megangal raagangal paadum
Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum
Female : Vaanmugil pondraval naan
Male : Unnai vaangidum bhoomiyum naanthaan kannae

Female : Malaigalil megangal raagangal paadum
Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum

Male : Ilang kadhal kili jodi edhirkaala isai paadi
Inbathai santhikattum
Female : Aaaaa…..eeraezhu ulagangal illaathaa bogangal
Ennendru sinthikattum

Male : Odam idhu odum intha odaithanilae
Female : Naanam vidai koorum antha velaithanilae
Male : Odam idhu odum intha odaithanilae
Female : Naanam vidai koorum antha velaithanilae
Male : Valaikkaram valaikkayilae
Valaikkaram valaikkayilae
Female : Vaaliba naadagam kaanbom kannaa

Male : Malaigalil megangal raagangal paadum
Female : Mazhaithuli mann meethu vanthaaga vendum

Male : Vaikaasi nilavae nee kai veesi nadai podu
Sorkaththin pakkathilae
Female : Aaaaa……maan vaiththa kannodu
Mai vaiththa pen ennai
Konjattum vetkaththilae

Male : Naalai manamaalai iru tholai thazhuvum
Female : Mogam enum raagam iru thegam pazhagum
Male : Naalai manamaalai iru tholai thazhuvum
Female : Aaaa….mogam enum raagam iru thegam pazhagum
Male : Mani vizhi mayangidumo
Mani vizhi mayangidumo
Female : Manthira poojaigal adhuthaan kannaa

Female : Malaigalil megangal raagangal paadum
Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum
Female : Vaanmugil pondraval naan
Male : Unnai vaangidum bhoomiyum naanthaan kannae
Both : Hehmmmhmm hmm mm

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி, சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்
பெண் : வான்முகில் போன்றவள் நான்
ஆண் : உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே

பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

ஆண் : இளங்காதல் கிளி ஜோடி எதிர்கால இசை பாடி
இன்பத்தை சந்திக்கட்டும்…
பெண் : ஆஆஆ……ஈரேழு உலகங்கள் இல்லாத போகங்கள்
என்னென்று சிந்திக்கட்டும்

ஆண் : ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே
பெண் : நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே
ஆண் : ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே
பெண் : நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே
ஆண் : வளைக்கரம் வளைக்கையிலே………
வளைக்கரம் வளைக்கையிலே………
பெண் : வாலிப நாடகம் காண்போம் கண்ணா

ஆண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
பெண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

ஆண் : வைகாசி நிலவே நீ கை வீசி நடை போடு
சொர்க்கத்தின் பக்கத்திலே…..
பெண் : ஆஆஆ…….மான் வைத்த கண்ணோடு
மை வைத்த பெண் என்னை
கொஞ்சட்டும் வெட்கத்திலே

ஆண் : நாளை மணமாலை இரு தோளை தழுவும்
பெண் : மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும்
ஆண் : நாளை மணமாலை இரு தோளை தழுவும்
பெண் : ஆஆ…..மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும்
ஆண் : மணி விழி மயங்கிடுமோ……..
மணி விழி மயங்கிடுமோ……..
பெண் : மந்திர பூஜைகள் அதுதான் கண்ணா…..

பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்
பெண் : வான்முகில் போன்றவள் நான்
ஆண் : உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே
இருவர் : ஹீஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here