Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Male : Maalaiyilae therkku moolaiyilae
Moganam paaduthu maanguyil
Maalaiyilae therkku moolaiyil
Moganam paaduthu maanguyil

Female : Maanguyilin andha paadilalae
Aanandham theduthu aan kuyil

Male : Siru thooralum saaralum
Maargazhi megangal thoova
Female : Pudhu mogamum vegamum
Poonthalir meniyil maeva

Female : Maanguyilin andha paadilalae
Aanandham theduthu aan kuyil

Male : Vaasalgalai moodatha devaalayam
Anudhinam kaanadhadho aaradhanam
Female : Vaarthaigalil kooradha premaayanam
Udhadugal seiyaadho paarayanam

Male : Vattradha aasaigalae
Oru kuttraala neer veezhchiyo
Female : Sallabha velaigalil
Indha polladha aaraichiyoo

Male : Yeninum naanangal vaa kanmani
Female : Paarkadal pondrathu poovudal
Male : Adhu naan indru neendhida
Thean alai paaindhida aada

Male : Maalaiyilae therkku moolaiyilae
Moganam paaduthu maanguyil

Female : Gokulathin gopalan kuzhal oodhuvaan
Kulamagal raadhavin nizhal theduvan
Male : Ezhu swaram vendaatha isai yedhamma
Ilanthendral theendaadha dhisai yedhamma

Female : Mei thottaal ooraayiram
Kodi minnlagal paaindhoduthu
Male : Kai pattaal noor aayiram
Pudhu mettugal poovaaguthu

Female : Nee thandhu naan thandhu thaen minjumo
Male : Meedhamum michamum yenadi
Female : Sugam nee thoda naan thoda
Ooruni pol ingu oorum

Female : Maanguyilin andha paadilalae
Aanandham theduthu aan kuyil
Male : Maalaiyilae therkku moolaiyilae
Moganam paaduthu maanguyil

Female : Pudhu mogamum vegamum
Poonthalir meniyil maeva
Male : Siru thooralum saaralum
Maargazhi megangal thoova

Male : Maalaiyilae therkku moolaiyil
Moganam paaduthu maanguyil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்
மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்

பெண் : மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண் குயில்

ஆண் : சிறு தூறலும் சாரலும்
மார்கழி மேகங்கள் தூவ..
பெண் : புது மோகமும் வேகமும்
பூந்தளிர் மேனியில் மேவ..

பெண் : மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண் குயில்

ஆண் : வாசலை மூடாத தேவாலயம்
அனுதினம் காணாதோ ஆராதனம்
பெண் : வார்த்தைகளில் கூறாத பிரேமாயணம்
உதடுகள் செய்யாதோ பாராயணம்

ஆண் : வற்றாத ஆசைகளே ஒரு
குற்றால நீர் வீழ்ச்சியோ
பெண் : சல்லாப வேளைகளில்
இந்த பொல்லாத ஆராய்ச்சியோ

ஆண் : ஏனின்னும் நாணங்கள் வா கண்மணி..
பெண் : பாற்கடல் போன்றது பூவுடல்
ஆண் : அது நான் இன்று நீந்திட
தேனலை பாய்ந்திட ஆட……..

ஆண் : மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்

பெண் : கோகுலத்தின் கோபாலன் குழல் ஊதுவான்
குலமகள் ராதாவின் நிழல் தேடுவான்
ஆண் : ஏழு ஸ்வரம் வேண்டாத இசை ஏதம்மா
இளந்தென்றல் தீண்டாத திசை ஏதம்மா

பெண் : மெய் தொட்டால் ஓராயிரம்
கொடி மின்னல்கள் பாய்ந்தோடுது
ஆண் : கைப் பட்டால் நூறாயிரம்
புது மொட்டுக்கள் பூவாகுது

பெண் : நீ தந்து நான் தந்து தேன் மிஞ்சுமோ
ஆண் : மீதமும் மிச்சமும் ஏனடி
பெண் : சுகம் நீ தொட நான் தொட
ஊருணி போல் இங்கு ஊறும்

பெண் : மாங்குயிலின் அந்த பாடலிலே
ஆனந்தம் தேடுது ஆண் குயில்
ஆண் : மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்

பெண் : புது மோகமும் வேகமும்
பூந்தளிர் மேனியில் மேவ..
ஆண் : சிறு தூறலும் சாரலும்
மார்கழி மேகங்கள் தூவ..

ஆண் : மாலையிலே தெற்கு மூலையிலே
மோகனம் பாடுது மாங்குயில்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here