Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Malar kodutthaen
Kai kulunga valaiyalittaen

Male : Malar kodutthaen
Kai kulunga valaiyalittaen
Mangai endhan raajaathikku naanae
Idhu oru seeraattammaa oo…
Ennaiyum thaalaattammaa
Magano magalo pirakkum
En veedu nalamaaga
Madiyil thavazhum uruvam
En thandhai mugamaaga

Male : Idhu oru seeraattammaa oo…
Ennaiyum thaalaattammaa

Male : Malar kodutthaen
Kai kulunga valaiyalittaen
Mangai endhan raajaathikku naanae
Idhu oru seeraattammaa oo…
Ennaiyum thaalaattammaa

Male : Ammaadi un maeni paal vannamo
Azhagaana un pillai thaen kinnamo
Ammaadi un maeni paal vannamo
Azhagaana un pillai thaen kinnamo
Maadhangal padhamaaga uruvaanadho
Maharaani mugam indru merugaerudho
Aadaadha ponnoonjal aadu
Paadaadha thenpaangu paadu

Male : Malar kodutthaen
Kai kulunga valaiyalittaen
Mangai endhan raajaathikku naanae
Idhu oru seeraattammaa oo…
Ennaiyum thaalaattammaa

Male : En paattil oru raagam undaanadhu
En veettin ennikkai moondraanadhu
Than kaigal kottattum en selvamae
Thaayaaga aagattum en dheivamae
Aadaadha ponnoonjal aadu
Paadaadha thenpaangu paadu

Male : Kannaana manavaalam saei aagiraan
Kalyaana magaraasi thaai aagiraal
Kannaana manavaalam saei aagiraan
Kalyaana magaraasi thaai aagiraal
Kattil kondaal angu naan pillaiyae
Thottil kandaal angu en pillaiyae
Aadaadha ponnoonjal aadu
Paadaadha thenpaangu paadu

Male : Malar kodutthaen
Kai kulunga valaiyalittaen
Mangai endhan raajaathikku naanae
Idhu oru seeraattammaa oo…
Ennaiyum thaalaattammaa

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்

ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா
மகனோ மகளோ பிறக்கும்
என் வீடு நலமாக
மடியில் தவழும் உருவம்
என் தந்தை முகமாக

ஆண் : இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா

ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா

ஆண் : அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
மாதங்கள் பதமாக உருவானதோ
மகராணி முகம் இங்கு மெருகேருதோ
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு

ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா

ஆண் : என் பாட்டில் ஒரு ராகம் உருவானது
என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது
தன் கைகள் கொட்டட்டும் என் செல்வமே
தாயாக ஆகட்டும் என் தெய்வமே
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு

ஆண் : கண்ணான மணவாளன் சேயாகிறான்
கண்ணான மகராசி தாயாகிறாள்
கண்ணான மணவாளன் சேயாகிறான்
கண்ணான மகராசி தாயாகிறாள்
கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே
தொட்டில் கொண்டாள் அங்கு என் பிள்ளையே
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு

ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here