Singers : Darshana K. T. and Shreya Ghoshal

Music by : Ilayaraja

Female Chorus : Oo…oo….oo…oo….. (4)

Female : Malar villilae ambondru
Vittaanae thozhi
Chorus : Villil ambu vittaane….
Villil ambu vittaane….

Female : Malar villilae ambondru
Vittaanae thozhi
Chorus : Villil ambu vittaane….

Female : Mangai nenjil kaayangal
Seidhaanae thozhi

Females : Poo vaendhan illaadhu
Pularaadhen pozhudhu
Vaan nilavum thaen nilavum
Saerndhadhae saerndhadhae
Poonguruvi maalai kondu
Vandhadhae vandhadhae

Chorus : Mangala vaathiyam
Muzhangudhu muzhangudhu
Manigalum aasaiyil
Kulungudhu kulungudhu
Manjalum kungumam
Kalandhadhu kalandhadhu
Silirkkindra manadhinil
Thulirndhida arumbidum

Female : Malar villilae ambondru
Vittaanae thozhi

Female : Mangai nenjil kaayangal
Seidhaanae thozhi

Both : Aasai thozhi ….thozhi thozhi

Female : Odum maegangal
Oru pandhal podattum

Chorus : Thaavum minnalgal
Oli vattam podattum

Female : Paadum paravaigal
Avan perai paadattum

Chorus : Vaanam thaedi poi
Nal vaazhthu koorattum

Female : Aa… nilavil manjam adhu
Thaeindhu vida koodum
Malaril manjam kooda vaadi vidum

Female : Manadhil manjam kooda
Yaekkam kolla koodum
Madiyil manjam ondru ida vendum

Female : Kanavinil poi vida
Varam thandhaai
Kaadhalai kandu kollum
Kangalai kondaai

Chorus : Mangala vaathiyam
Muzhangudhu muzhangudhu
Manigalum aasaiyil
Kulungudhu kulungudhu
Manjalum kungumam
Kalandhadhu kalandhadhu
Silirkkindra manadhinil
Thulirndhida arumbidum

Female : Malar villilae ambondru
Vittaanae thozhi

Female : Mangai nenjil kaayangal
Seidhaanae thozhi

Female : Kaalai adhi kaalai
Avan mugathinil yezha vendum

Chorus : Maalai vandhaalo
Avan maarbinil vizha vendum

Female : Poiyaai sila naeram
Siru oodal vara vendum

Chorus : Kaiyaal anaikkaamal
Avan meiyaal thoda vendum

Female : Nadhiyil irangidum padaginai pola
Ninaivin alaigalil avan neendha

Female : Aa… idaiyil thavazhndhidum
Maegalai manigal
Mannan theendida dhinam yaenga

Chorus : Maayavan thirumugam
Paarppadhu thaan
Karu mai vizhigal kalithidum
Vasantha vizhaa

Chorus : Mangala vaathiyam
Muzhangudhu muzhangudhu
Manigalum aasaiyil
Kulungudhu kulungudhu
Manjalum kungumam
Kalandhadhu kalandhadhu
Silirkkindra manadhinil
Thulirndhida arumbidum

Female : Malar villilae ambondru
Vittaanae thozhi

Female : Aaa…mangai nenjil kaayangal
Seidhaanae thozhi

Both : Aasai thozhi ….thozhi thozhi

பாடகர்கள் : தர்ஷனா கே. டி. மற்றும் ஸ்ரேயா ஹோசல்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : ஓஓ……ஓ…..ஓ….ஓஒ….. (4)

பெண் : மலர் வில்லிலே அம்பொன்று
விட்டானே தோழி
குழு : வில்லில் அம்பு விட்டானே…….
வில்லில் அம்பு விட்டானே…….

பெண் : மலர் வில்லிலே அம்பொன்று
விட்டானே தோழி
குழு : வில்லில் அம்பு விட்டானே…….

பெண் : மங்கை நெஞ்சில் காயங்கள்
செய்தானே தோழி

பெண் : பூவேந்தன் இல்லாது
புலராதென் பொழுது
வான் நிலவும் தேன் நிலவும்
சேர்ந்ததே சேர்ந்ததே
பூங்குருவி மாலை கொண்டு
வந்ததே வந்ததே

குழு : மங்கள வாத்தியம்
முழங்குது முழங்குது
மணிகளும் ஆசையில்
குலுங்குது குலுங்குது
மஞ்சளும் குங்குமம்
கலந்தது கலந்தது
சிலிர்க்கிற மனதினில்
துளிர்ந்திட அரும்பிடும்

பெண் : மலர் வில்லிலே அம்பொன்று
விட்டானே தோழி

பெண் : மங்கை நெஞ்சில் காயங்கள்
செய்தானே தோழி

இருவர் : ஆசைத் தோழி……தோழி தோழி

பெண் : ஓடும் மேகங்கள்
ஒரு பந்தல் போடட்டும்

குழு : தாவும் மின்னல்கள்
ஒளி வட்டம் போடட்டும்

பெண் : பாடும் பறவைகள்
அவன் பேரைப் பாடட்டும்

குழு : வானம் தேடிப் போய்
நல் வாழ்த்துக் கூறட்டும்

பெண் : ஆ… நிலவில் மஞ்சம் அது
தேய்ந்து விடக் கூடும்
மலரில் மஞ்சம் கூட வாடி விடும்

பெண் : மனதில் மஞ்சம் கூட
ஏக்கம் கொள்ளக் கூடும்
மடியில் மஞ்சம் ஒன்று இட வேண்டும்

பெண் : கனவினில் போய் விட
வரம் தந்தாய்
காதலைக் கண்டு கொள்ளும்
கண்களைக் கண்டாய்

குழு : மங்கள வாத்தியம்
முழங்குது முழங்குது
மணிகளும் ஆசையில்
குலுங்குது குலுங்குது
மஞ்சளும் குங்குமம்
கலந்தது கலந்தது
சிலிர்க்கிற மனதினில்
துளிர்ந்திட அரும்பிடும்

பெண் : மலர் வில்லிலே
அம்பொன்று விட்டானே தோழி

பெண் : மங்கை நெஞ்சில்
காயங்கள் செய்தானே தோழி

பெண் : காலை அதிகாலை
அவன் முகத்தில் எழ வேண்டும்

குழு : மாலை வந்தாலோ
அவன் மார்பில் விழ வேண்டும்

பெண் : பொய்யாய் சில நேரம்
சிறு ஊடல் வர வேண்டும்

குழு : கையால் அணைக்காமல்
அவன் மெய்யால் தொட வேண்டும்

பெண் : நதியில் இறங்கிடும்
படகினைப் போல
நினைவின் அலைகளில் அவன் நீந்த

பெண் : ஆ… இடையில் தவழ்ந்திடும்
மேகலை மணிகள்
மன்னன் தீண்டிட தினம் ஏங்க

குழு : மாயவன் திருமுகம்
பார்ப்பதுதான்
கரு மை விழிகள் களித்திடும்
வசந்த விழா

குழு : மங்கள வாத்தியம்
முழங்குது முழங்குது
மணிகளும் ஆசையில்
குலுங்குது குலுங்குது
மஞ்சளும் குங்குமம்
கலந்தது கலந்தது
சிலிர்க்கிற மனதினில்
துளிர்ந்திட அரும்பிடும்

பெண் : மலர் வில்லிலே
அம்பொன்று விட்டானே தோழி

பெண் : ஆ… மங்கை நெஞ்சில்
காயங்கள் செய்தானே தோழி

பெண் : மலர் வில்லிலே
அம்பொன்று விட்டானே தோழி

பெண் : ஆஅ……மங்கை நெஞ்சில்
காயங்கள் செய்தானே தோழி

இருவர் : ஆசைத் தோழி…….தோழி தோழி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here