Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : M. S. Viswanathan

Male : Malarae… kurinji malarae…
Female : Malarae… kurinji malarae…

Male : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai

Male : Malarae kurinji malarae…

Female : Yaar madi sumandhu
Thaan pirandhaalum
Thaai madi marandhu
Thalaivanai saerum
Pennennum pirappallavo

Male : Kodi arumbaaga
Chediyinil thondri
Kovilil vaazhum dhaevanai saerum
Malarae nee pennallavo

Male : Naayagan nizhalae
Naayagi ennum
Kaaviyam solli kazhuthinil minnum
Magalae un thirumaangalyam

Female : Thaai vazhi sondham
Aayiram irundhum
Thalaivanin anbil vilaivadhu thaanae
Uravennum saamraajiyam

Male : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai

Male : Malarae kurinji malarae…

Female : Paadidum kaattrae
Paravaiyin inamae
Pani malai thodaril
Paaindhidum nadhiyae
Ododi vaarungalaen

Male : Paal manam ondru
Poo manam ondru
Kaadhalil indru
Kalandhadhu kandu

Both : Nal vaazhthu koorungalaen

Both : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai

Female : Malarae kurinji malarae

Male : Malarae kurinji malarae…

பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : மலரே… குறிஞ்சி மலரே…

ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…

பெண் : யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ

ஆண் : கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

ஆண் : நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

பெண் : தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…

பெண் : பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே

ஆண் : பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு

இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே

இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

பெண் : மலரே குறிஞ்சி மலரே

ஆண் : மலரே குறிஞ்சி மலரே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here