Singers : Arunmozhi and S. Janaki

Music by : Ilayaraja

Male : { Malarae thendral paadum gaanam idhu
Nilavae unnai koodum vaanam idhu } (2)

Female : Nilam idam maarinaalum
Nizhal niram maarinaalum

Male : Nilai perum kaadhal ennum
Nijam niram maaridadhu

Female : Iraivanin theerpu idhu oh oh
Evar idhai maatruvadhu

Male : Malarae thendral paadum gaanam idhu

Female : ………………………………….

Male : Boopaalam ketkum adhikaalaiyum
Poonjolai pookum ila maalaiyum

Female : Nee andri yedhu oru nyaabagam
Nee pesum pechu manivaasagam

Male : Ullam ennum veedengum
Un azhagil naan dhaanae
Sithirathai pol endrum
Otti vaithu paarpenae

Female : Un paruvam ilanthalirae
Unakena naan vaazhgiren

Male : Malarae thendral paadum gaanam idhu
Nilavae unnai koodum vaanam idhu

Female : …………………………………………

Female : Maangalyam soodum mana naal varum
Kalyana maalai iru thol varum

Male : Vaai aara vaazhtha indha oor varum
Oorgolam poga mani ther varum

Female : Solliyadhu polae nam sorgangal kai koodum
Vandhadhoru naal endrae sindhukavi kan paadum

Male : Valai karamum thunai karamum
Varaindhidum thaen kaaviyam

Female : Malarae thendral paadum gaanam idhu
Nilavae unnai koodum vaanam idhu

Male : Nilam idam maarinaalum
Nizhal niram maarinaalum

Female : Nilai perum kaadhal ennum
Nijam niram maaridadhu

Male : Iraivanin theerpu idhu oh oh
Evar idhai maatruvadhu

Female : Malarae thendral paadum gaanam idhu

Male : Nilavae unnai koodum vaanam idhu

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { மலரே தென்றல்
பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும்
வானம் இது } (2)

பெண் : நிலம் இடம்
மாறினாலும் நிழல்
நிறம் மாறினாலும்

ஆண் : நிலைபெறும்
காதலென்னும் நிஜம்
நிறம் மாறிடாது

பெண் : இறைவனின்
தீர்ப்பு இது ஓ ஓ எவர்
இதை மாற்றுவது

ஆண் : மலரே தென்றல்
பாடும் கானம் இது

பெண் : ………………………

ஆண் : பூபாளம் கேட்கும்
அதிகாலையும் பூஞ்சோலை
பூக்கும் இளமாலையும்

பெண் : நீ அன்றி ஏது
ஒரு ஞாபகம் நீ பேசும்
பேச்சு மணிவாசகம்

ஆண் : உள்ளம் என்னும்
வீடெங்கும் உன் அழகில்
நான் தானே சித்திரத்தை
போல் என்றும் ஒட்டி
வைத்து பார்ப்பேனே

பெண் : உன் பருவம்
இளந்தளிரே உனக்கென
நான் வாழ்கிறேன்

ஆண் : மலரே தென்றல்
பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும்
வானம் இது

பெண் : ………………………

பெண் : மாங்கல்யம்
சூடும் மண நாள் வரும்
கல்யாண மாலை இரு
தோள் வரும்

ஆண் : வாய் ஆற
வாழ்த்த இந்த ஊர்
வரும் ஊர்கோலம்
போக மணி தேர் வரும்

பெண் : சொல்லியது
போலே நம் சொர்கங்கள்
கை கூடும் வந்ததொரு
நாள் என்றே சிந்து கவி
கண் பாடும்

ஆண் : வலை கரமும்
துணை கரமும் வரைந்திடும்
தேன் காவியம்

பெண் : மலரே தென்றல்
பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும்
வானம் இது

ஆண் : நிலம் இடம்
மாறினாலும் நிழல்
நிறம் மாறினாலும்

பெண் : நிலைபெறும்
காதலென்னும் நிஜம்
நிறம் மாறிடாது

ஆண் : இறைவனின்
தீர்ப்பு இது ஓ ஓ எவர்
இதை மாற்றுவது

பெண் : மலரே தென்றல்
பாடும் கானம் இது
ஆண் : நிலவே உன்னை
கூடும் வானம் இது


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here