Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Malargal engae kungumam engae
Manjal engae thozhi
Manamaganai kaanum munnae
Mangalam seiya vaadi

Female : Malargal engae kungumam engae
Manjal engae thozhi
Manamaganai kaanum munnae
Mangalam seiya vaadi

Female : Mudhalvan enbaar iraivan enbaar
Paramasivan enbaar
Mudhalvan enbaar iraivan enbaar
Paramasivan enbaar
Avan moondru kannaal ennai kaana
Maappillaiyai vandhaar
Moondru kannaal ennai kaana
Maappillaiyai vandhaar

Female : Malargal engae kungumam engae
Manjal engae thozhi
Manamaganai kaanum munnae
Mangalam seiya vaadi

Female : Boomi kaakka nanjai unda
Neelakanda devan
Poovai pondra idhazhil konjam
Amudhu unna vendum

Female : Boomi kaakka nanjai unda
Neelakanda devan
Poovai pondra idhazhil konjam
Amudhu unna vendum

Female : Kaamanaiyae theeyilittaan
Yogam kaakka vendi
Kaamanaiyae theeyilittaan
Yogam kaakka vendi
Avan kaadhal thandha thee anaikka
Maappillai aanaanadi
Kaadhal thandha thee anaikka
Maappillai aanaanadi

Female : Malargal engae kungumam engae
Manjal engae thozhi
Manamaganai kaanum munnae
Mangalam seiya vaadi

Female : Manidhar sollum naangu vedham
Azhaikkumadi avanai
Mangai sollum vaedham kooda
Mayakumadi sivanai

Female : Manidhar sollum naangu vedham
Azhaikkumadi avanai
Mangai sollum vaedham kooda
Mayakumadi sivanai

Female : Devar soozhndha oorvalathai
Naanum kaana vendum…aaa..aaa.
Devar soozhndha oorvalathai
Naanum kaana vendum
Seval ondru koovum munbae
Maalai sooda vendam

Female : Malargal engae kungumam engae
Manjal engae thozhi
Manamaganai kaanum munnae
Mangalam seiya vaadi

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே
மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே
மங்களம் செய்ய வாடி……..

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே
மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே
மங்களம் செய்ய வாடி…

பெண் : முதல்வர் என்பார் இறைவன் என்பார்
பரமசிவன் என்பார்
முதல்வர் என்பார் இறைவன் என்பார்
பரமசிவன் என்பார்
அவர் மூன்று கண்ணால் என்னைக் காண
மாப்பிள்ளையை வந்தார்……
மூன்று கண்ணால் என்னைக் காண
மாப்பிள்ளையை வந்தார்

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே
மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே
மங்களம் செய்ய வாடி…

பெண் : பூமி காக்க நஞ்சை உண்ட
நீலகண்ட தேவன்
பூவைப் போன்ற இதழில் கொஞ்சம்
அமுதம் உண்ண வேண்டும்

பெண் : பூமி காக்க நஞ்சை உண்ட
நீலகண்ட தேவன்
பூவைப் போன்ற இதழில் கொஞ்சம்
அமுதம் உண்ண வேண்டும்

பெண் : காமனையே தீயிலிட்டான்
யோகம் காக்க வேண்டி
காமனையே தீயிலிட்டான்
யோகம் காக்க வேண்டி
அவன் காதல் தந்த தீ அணைக்க
மாப்பிள்ளை ஆனான்டி ….
காதல் தந்த தீ அணைக்க
மாப்பிள்ளை ஆனான்டி ….

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே
மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே
மங்களம் செய்ய வாடி…

பெண் : மனிதர் சொல்லும் நான்கு வேதம்
அழைக்குமடி அவனை
மங்கை சொல்லும் வேதம் கூட
மயக்குமடி சிவனை

பெண் : மனிதர் சொல்லும் நான்கு வேதம்
அழைக்குமடி அவனை
மங்கை சொல்லும் வேதம் கூட
மயக்குமடி சிவனை

பெண் : தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை
நானும் காண வேண்டும்
தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை
நானும் காண வேண்டும்
சேவலொன்று கூவுமுன்பு
மாலை சூட வேண்டும்……

பெண் : மலர்கள் எங்கே குங்குமம் எங்கே
மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே
மங்களம் செய்ய வாடி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here