Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shanakar Ganesh

Male : Manaivi oru manthiri
Avathaanae raja thanthiri
Manaivi oru manthiri
Avathaanae raja thanthiri
Pombalai ittathu sattam
Poduvaa aayiram thittam
Manjalil thaaliyai kattum
Mannavan chinnavan ellarukkum

Male : Manaivi oru manthiri
Avathaanae raja thanthiri
Manaivi oru manthiri
Avathaanae raja thanthiri

Male : Poo mudicha senthaamarai
Pottu vechcha moonaampira
Ponnu illaraththin kannu
Thottathellaam ponnaagalaam
Nattathellam poovaagalaam
Raasi manjal mugaraasi

Male : Paattukkoru paarathiyum
Paadi vechchan penmaiyaththaan
Paattil avan sonnathellaam
Poigal alla unmaiyaththaab

Male : Poosal theeravae nalla puththi kooravaa
Vaasal thediyae vanthu vaazhththu paaduvaa

Male : Manaivi oru manthiri
Avathaanae raja thanthiri
Manaivi oru manthiri
Avathaanae raja thanthiri

Male : Eeramundu nenjoduthaa
Veeramundu kannoduthaan
Dhesam thaaikulaththa pesum
Kadhalilae maadhavithaan
Karpinilae kannagithaan
Naanam ponnu vidum paanam

Male : Kondavalum aasaiyilae
Koorukindra manthiranthaan
Kettavudan aann maganum
Aadugindra enthiramthaan
Maaman thedidum ponjaathi aanava
Saami meniyil sari paadhiyaanava

Male : Manaivi oru manthiri
Avathaanae raja thanthiri
Manaivi oru manthiri
Avathaanae raja thanthiri….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
பொம்பளை இட்டது சட்டம்
போடுவா ஆயிரம் திட்டம்
மஞ்சளில் தாலியைக் கட்டும்
மன்னவன் சின்னவன் எல்லாருக்கும்

ஆண் : மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி

ஆண் : பூ முடிச்ச செந்தாமரை
பொட்டு வெச்ச மூணாம்பிற
பொண்ணு இல்லறத்தின் கண்ணு
தொட்டதெல்லாம் பொன்னாகலாம்
நட்டதெல்லாம் பூவாகலாம்
ராசி மஞ்சள் முகராசி

ஆண் : பாட்டுக்கொரு பாரதியும்
பாடி வெச்சான் பெண்மையத்தான்
பாட்டில் அவன் சொன்னதெல்லாம்
பொய்கள் அல்ல உண்மையத்தான்

ஆண் : பூசல் தீரவே நல்ல புத்தி கூறுவா
வாசல் தேடியே வந்து வாழ்த்து பாடுவா

ஆண் : மனைவி ஒரு மந்திரி
அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி
அவதானே ராஜதந்திரி

ஆண் : ஈரமுண்டு நெஞ்சோடுதான்
வீரமுண்டு கண்ணோடுதான்
தேசம் தாய்க்குலத்த பேசும்
காதலிலே மாதவிதான்
கற்பினிலே கண்ணகிதான்
நாணம் பொண்ணு விடும் பாணம்

ஆண் : கொண்டவளும் ஆசையிலே
கூறுகின்ற மந்திரந்தான்
கேட்டவுடன் ஆண் மகனும்
ஆடுகின்ற எந்திரம்தான்
மாமன் தேடிடும் பெஞ்சாதி ஆனவ
சாமி மேனியில் சரி பாதியானவ

ஆண் : மனைவி ஒரு மந்திரி
அவதானே ராஜதந்திரி
மனைவி ஒரு மந்திரி
அவதானே ராஜதந்திரி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here