Singers : Mano, Swarnalatha, S. P. Shailaja and Dinesh

Music by : S. A. Rajkumar

Female : Manam paadida ninaikkirathae vaarthai engae
Manam paadida ninaikkirathae vaarthai engae
Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Podhu maedaiyil vidukathaiyo paadungalaen
Female : Pudhu vaanaththil oli varuthae aadungalaen

Female : Manam paadida ninaikkirathae vaarthai engae
Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae

Male : Dhesangal ellaam pedhangal pesum
Vaanangala kooda thoorangal aagum
Naalai nam tholgal paaranal aagum
Female : Naam konda nesam naadengum vaazhum
Male : Aananthamae….
Female : Aarambamae….
Both : Sogangal yaeno…ho…hoh….

Female : Manam paadida ninaikkirathae vaarthai engae
Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae

Male : Vidigindra kaalai vilakkangal koorum
Female : Varungaalam nammai varavettru paadum
Male : Karaigindra megam pozhigindra neram
Female : Kanavugal ellaam nanavendru aagum
Males : Vedhangalai naam seigirom vaadhangal Yaeno

Female : Manam paadida ninaikkirathae vaarthai engae
Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae

All : ……………….

Female : Oru vaanil koodum paravaigal aanom
Male : Uravendra cholaikku malar kondu ponom
Female : Engengu vaazhnthom vanthingu saernthom
Male : Thunbangal endraal ennaendru ketppom
All : Indrallavo vidai kolkirom engengu saervom

Female : Manam paadida ninaikkirathae vaarthai engae
Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae
Podhu maedaiyil vidukathaiyo paadungalaen
Female : Pudhu vaanaththil oli varuthae aadungalaen

Female : Manam paadida ninaikkirathae vaarthai engae
Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae…

பாடகர்கள் : மனோ, ஸ்வர்ணலதா, எஸ். பி. ஷைலஜா
மற்றும் தினேஷ்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே
பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன்
பெண் : புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

ஆண் : தேசங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்
வானங்கள் கூட தூரங்கள் ஆகும்
நாளை நம் தோள்கள் பாரங்கள் ஆகும்
பெண் : நாம் கொண்ட நேசம் நாடெங்கும் வாழும்
ஆண் : ஆனந்தமே……
பெண் : ஆரம்பமே….
இருவர் : சோகங்கள் ஏனோ……ஹோ…ஹொஹ்..

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

ஆண் : விடிகின்ற காலை விளக்கங்கள் கூறும்
பெண் : வருங்காலம் நம்மை வரவேற்று பாடும்
ஆண் : கரைகின்ற மேகம் பொழிகின்ற நேரம்
பெண் : கனவுகள் எல்லாம் நனவென்று ஆகும்
ஆண்கள் : வேதங்களை நாம் செய்கிறோம் வாதங்கள்
ஏனோ

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

அனைவரும் : …………………………….

பெண் : ஒரு வானில் கூடும் பறவைகள் ஆனோம்
ஆண் : உறவென்ற சோலைக்கு மலர் கொண்டு போனோம்
பெண் : எங்கெங்கு வாழ்ந்தோம் வந்திங்கு சேர்ந்தோம்
ஆண் : துன்பங்கள் என்றால் என்னென்று கேட்போம்
அனைவரும் : இன்றல்லவோ விடை கொள்கிறோம்
எங்கெங்கு சேர்வோம்

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே
பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன்
பெண் : புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே
ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here