Singers : Haricharan and Latha Rajinikanth

Music by : A. R. Rahman

Male : Kanneer kaniyae
Unnai kai vidamaaten
Sathiyam sathiyam
Idhu sathiyamae

Male : Maalai soodiya
Kaalai kathirin melae
Sathiyam sathiyam
Idhu sathiyamae

Male : Oru kuzhanthai polae
Oru vairam polae
Thuimaiyaana en sathiyam
Punithamaanathu

Male : Ippiraviyil innoru pennai
Sinthaiyilum thoden
Pirithor pakkam manam saaya
Piriyam kaapen

Male : Chella kolusin sinungal arinthu
Sevai seiven
Netri pottil mutham pathithu
Nitham ezhuven

Male : Kai porul yaavaiyum
Karaithaalum kanakku kelen
Ovvoru vaadham mudiyum podhum
Unnidam thorpen

Male : Kanneer kaniyae
Unnai kai vidamaaten
Sathiyam sathiyam
Idhu sathiyamae

Male : Maalai soodiya
Kaalai kathirin melae
Sathiyam sathiyam
Idhu sathiyamae

Male : Artha jaama thirudan pola
Athirnthu pesen
Kaamam theerum pozhuthum
Enthan kaadhal theeren

Male : Maadha malarchi
Maraiyum vayathil
Maarbu kodupen
Noi madiyodu nee veezhnthaal
Thaai madiyaaven

Male : Swasam pola arugil irunthu
Sugapadavaipen
Undhan uravai endhan uravaai
Nenjil sumappen

Male : Unn kanavugal nijamaaga
Ennaiyae tharuven
Un vaazhvu mannil neela
En uyir tharuven

Male : Ketti melam ketti melam…

Female : Kaadhal kanavaa undhan
Karam vida maaten
Sathiyam sathiyam
Idhu sathiyamae

Female : Thaai vazhi vandha
Engal dharmathin melae
Sathiyam sathiyam
Idhu sathiyamae

Female : Oru kuzhanthai polae
Oru vairam polae
{Thuimaiyaana en sathiyam
Punithamaanathu} (3)

 

பாடகி : லதா ரஜினிகாந்த்

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கண்ணீா்
கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

ஆண் : மாலை சூடிய
காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

ஆண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே தூய்மையான
என் சத்தியம் புனிதமானது

ஆண் : இப்பிறவியில்
இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம்
சாயா பிரியம் காப்பேன்

ஆண் : செல்ல
கொலுசின் சிணுங்கல்
அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம்
பதித்து நித்தம் எழுவேன்

ஆண் : கை பொருள்
யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன் ஒவ்வொரு
வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்

ஆண் : கண்ணீா்
கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

ஆண் : மாலை சூடிய
காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

ஆண் : அர்த்த ஜாம
திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதும்
எந்தன் காதல் தீரேன்

ஆண் : மாத மலர்ச்சி
மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ
வீழ்ந்தால் தாய்
மடியாவேன்

ஆண் : சுவாசம் போல
அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன்
உறவாய் நெஞ்சில்
சுமப்பேன்

ஆண் : உன் கனவுகள்
நிஜமாக என்னையே
தருவேன் உன் வாழ்வு
மண்ணில் நீள என் உயிர்
தருவேன்

ஆண் : கெட்டி மேளம்
கெட்டி மேளம்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

பெண் : தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

பெண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே
{ தூய்மையான
என் சத்தியம்
புனிதமானது } (3)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here