Singer : P. Susheelaa

Music by : S. M. Subbaiah Naidu

Female : Mana malarae kanirasamae
Maasillaatha thangamae
Valarum chanthira pimbamae

Female : Mana malarae kanirasamae
Maasillaatha thangamae
Valarum chanthira pimbamae

Female : Kani vaayithazhin punnagaiyaal
Manathai kavarum kiliyae
Kalai azhagu thavazhum silaiyae…ae….
Azhagu thavazhum silaiyae…

Female : Kani vaayithazhin punnagaiyaal
Manathai kavarum kiliyae
Kalai azhagu thavazhum silaiyae…ae….
Azhagu thavazhum silaiyae…

Female : Unai enni ullam magizhuthadaa
Enathu anbin vellame
Inikkum mazhalai selvamae…

Female : Mana malarae kanirasamae
Maasillaatha thangamae
Valarum chanthira pimbamae

Female : Pazhamum paalum ootti unnai
Pallikoodam anuppuven
Padiththu neeyum ariya periya
Pattam vaangi thirumbuvaai
Padiththu neeyum ariya periya
Pattam vaangi thirumbuvaai
Athai enni ullam magizhuthadaa
Enathu anbin vellame
Inikkum mazhalai selvamae…

Female : Mana malarae kanirasamae
Maasillaatha thangamae
Valarum chanthira pimbamae

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : மண மலரே கனிரசமே
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே

பெண் : மண மலரே கனிரசமே…..
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே

பெண் : கனி வாயிதழின் புன்னகையால்
மனதைக் கவரும் கிளியே
கலை அழகு தவழும் சிலையே…..ஏ….
அழகு தவழும் சிலையே

பெண் : கனி வாயிதழின் புன்னகையால்
மனதைக் கவரும் கிளியே
கலை அழகு தவழும் சிலையே…..ஏ….
அழகு தவழும் சிலையே

பெண் : உனை எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே…

பெண் : மண மலரே கனிரசமே…..
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே

பெண் : பழமும் பாலும் ஊட்டி உன்னை
பள்ளிக்கூடம் அனுப்புவேன்
படித்து நீயும் அரிய பெரிய
பட்டம் வாங்கித் திரும்புவாய்
படித்து நீயும் அரிய பெரிய
பட்டம் வாங்கித் திரும்புவாய்
அதை எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே……

பெண் : மண மலரே கனிரசமே…..
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here