Singers : K. J. Jesudass and P. Suseela

Music by : Chandrabose

Male : Aaraaro aariro aaraaro aariraro
Manasula enna nenachchae
Mazhalaiyil Sollidaiyaa
Varuththam irunthaa maarugira naeramaiyyaa
Manasula enna nenachchae
Mazhalaiyil Sollidaiyaa
Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Male : Unnudaiya punnagaiyil
Urangum vennilavu
Unna peththa punniyaththil
Mayangum pennilavu

Male : Manasula enna nenachchae
Mazhalaiyil Sollidaiyaa
Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Female : En kadhai keladaa
Thunbam eththanai naaladaa
Mann tharai meedhilae naan sinthiya paaladaa
Oru dheivamum vanthathu
Ingu thanjamum thanthathu
Antha nandriyai naanumthaan
Ingu eppadi solvathu

Male : Ingu kaalamthaan naam saera
Paalangal ittathammaa
Edhirpaaraamal thaedamal paasamum
Naesamum vaasalil vanthathu

Male : Manasula enna nenachchae
Mazhalaiyil Sollidaiyaa
Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Male : Poomara solaigal
Endrum bhoomikku paarammaa
Soodidum malaigal
Endrum saamikku paaramma

Male : Pirai chandhiran koodaththaan
Karai kondathu paramma
Kurai ullathu enbathaal
Vaanam kai vittu pogumaa

Female : Intha rojavum mullodu
Unnidam vanthathaiyya
Un thol meedhu naalthorum
Naanoru paaramo neeyoru paramo

Male : Manasula enna nenachchae
Mazhalaiyil Sollidaiyaa
Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Male : Unnudaiya punnagaiyil
Urangum vennilavu
Unna peththa punniyaththil
Mayangum pennilavu

Female : Manasula enna nenaichae
Mazhaiyil sollidadaa
Varutham irunthaa maarugira naeramadaa
Aaraaro aariraro aaraaro aariraro
Mmmmmmm……mmmmmmmm……

பாடகர்கள் : கே ஜே யேசுதாஸ் மற்றும் பி சுசீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
மனசில என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா

ஆண் : உன்னுடைய புன்னகையில்
உறங்கும் வெண்ணிலவு
உன்னப் பெத்த புண்ணியத்தில்
மயங்கும் பெண்ணிலவு

ஆண் : மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா…

பெண் : என் கதை கேளடா
துன்பம் எத்தனை நாளடா
மண் தரை மீதிலே நான் சிந்திய பாலடா
ஒரு தெய்வமும் வந்தது
இங்கு தஞ்சமும் தந்தது
அந்த நன்றியை நானும்தான்
இங்கு எப்படி சொல்வது

ஆண் : இங்கு காலம்தான் நாம் சேர
பாலங்ககள் இட்டதம்மா
எதிர்பாராமல் தேடாமல் பாசமும்
நேசமும் வாசலில் வந்தது

பெண் : மனசில என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடடா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா

ஆண் : பூமரச் சோலைகள்
என்றும் பூமிக்கு பாரமா
சூடிடும் மாலைகள்
என்றும் சாமிக்கு பாரமா

ஆண் : பிறை சந்திரன் கூடத்தான்
கறை கொண்டது பாரம்மா
குறை உள்ளது என்பதால்
வானம் கை விட்டு போகுமா

பெண் : இந்த ரோஜாவும் முள்ளோடு
உன்னிடம் வந்ததய்யா
உன் தோள் மீது நாள்தோறும்
நானொரு பாரமோ நீயொரு பாரமோ

ஆண் : மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா

ஆண் : உன்னுடைய புன்னகையில்
உறங்கும் வெண்ணிலவு
உன்னப் பெத்த புண்ணியத்தில்
மயங்கும் பெண்ணிலவு

பெண் : மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடடா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா..
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ம்ம்ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here