Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Manjal mugamae varuga
Mangala vilakkae varuga

Female : Konjum thamizhae varuga
Kodaanu kodi tharuga

Male : Manjal mugamae varuga
Mangala vilakkae varuga

Female : Konjum thamizhae varuga
Kodaanu kodi tharuga

Male : {Pen paarthu konda podhu
Thalai man paarkka nindra maadhu
Then paangu chaelai kulunga
Ennai serndhaalae kangal mayanga} (2)

Female : Karungoondhal malargal udhira
Iru kan konda maiyum karaiya
Karungoondhal malargal udhira
Iru kan konda maiyum karaiya
Uravaada vandha manamae
Idhu unnaal vilaindha sugamae

Male : Manjal mugamae varuga
Mangala vilakkae varuga

Female : Konjum thamizhae varuga
Kodaanu kodi tharuga

Female : {Kaettaalum kaadhal kidaikkum
Manam kaelaamal alli kodukkum
Kothodu maeni kalangum
Adhu kulir kaalam pola vilangum} (2)

Male : Muthaana kanni nagaiyum
Innum mudhiraadha kaadhal kaniyum
Muthaana kanni nagaiyum
Innum mudhiraadha kaadhal kaniyum
Athaan endrazhaikkum azhagum
Naan ariyaadha inbam inbam

Male : Manjal mugamae varuga
Mangala vilakkae varuga

Female : Konjum thamizhae varuga
Kodaanu kodi tharuga

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக

பெண் : கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக

ஆண் : மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக

பெண் : கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக

ஆண் : {பெண் பார்த்துக் கொண்டபோது
தலை மண் பார்க்க நின்ற மாது
தென்பாங்குச் சேலை குலுங்க
என்னைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க} (2)

பெண் : கருங்கூந்தல் மலர்கள் உதிர
இரு கண் கொண்ட மையும் கரைய
கருங்கூந்தல் மலர்கள் உதிர
இரு கண் கொண்ட மையும் கரைய
உறவாட வந்த மனமே
இது உன்னால் விளைந்த சுகமே

ஆண் : மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக

பெண் : கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக

பெண் : {கேட்டாலும் காதல் கிடைக்கும்
மனம் கேளாமல் அள்ளிக் கொடுக்கும்
கொத்தோடு மேனி கலங்கும்
அது குளிர்காலம் போல விளங்கும்} (2)

ஆண் : முத்தான கன்னி நகையும்
இன்னும் முதிராத காதல் கனியும்
முத்தான கன்னி நகையும்
இன்னும் முதிராத காதல் கனியும்
அத்தான் என்றழைக்கும் அழகும்
நான் அறியாத இன்பம் இன்பம்

ஆண் : மஞ்சள் முகமே வருக
மங்கள விளக்கே வருக

பெண் : கொஞ்சும் தமிழே வருக
கோடான கோடி தருக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here