Singer : Vani Jayaram

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Mangala kannagi kunguma janaki
Nalangal thulanga vilanga aniyum thaaliyaa
Nadaga kaviya kaveri madhavi
Mayangi kulungi arangil aniyum salangaiya
Thaaliyaa..salangaiyaa
Thaaliyaa..salangaiyaa

Female : Manamagal ival enum deiva bandhama

Female : Vilaimagal ival enum dhinasari sondhama
Manamagal ival enum deiva bandhama
Vilaimagal ival enum dhinasari sondhama
Thaalikkum medai salangaikkum medai
Irandil edhu nerumo
Thalaivan oruvan valangum bandham serumo
Thaaliyaa..salangaiyaa
Thaaliyaa..salangaiyaa

Female : Sathiyam thathuvam pongum vaazhkaiya
Nithiyam methaiyil konjum vaazhkkaiya
Sathiyam thathuvam pongum vaazhkaiya
Nithiyam methaiyil konjum vaazhkkaiya
Kalaimagal endrae marumagalaagum
Punidha nilai serumo
Thagatheem thagatheem enavae aada nerumo

Female : Mangala kannagi kunguma janaki
Nalangal thulanga vilanga aniyum thaaliyaa
Nadaga kaviya kaveri madhavi
Mayangi kulungi arangil aniyum salangaiya

Female : Ilamai maeni idhu perumaiyodu
Kollum malargalo
Sabai yeri aadi nenjai
Soorai aadum iru vizhigalo

Female : Oru ullam thannil thannai
Alli veikkum uyar angamo
Malar palli meedhu seiyum
Kalla kaadhal tharum sangamo

Female : Kadhalum ennai marukkumo
Vedhamum ennai verukkumo
Nadhamae ennai anaikkumo
Nallavan ullam manakkumo

Female : Kalaiyo enna nilaiyoo
Poruloo iraivan aruloo….

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மங்கல கண்ணகி குங்கும ஜானகி
நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா
நாடக காவிய காவிரி மாதவி
மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா
தாலியா………சலங்கையா……..
தாலியா………சலங்கையா……..

பெண் : மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா

பெண் : விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா
மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா
விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா
தாலிக்கும் மேடை சலங்கைக்கும் மேடை
இரண்டில் எது நேருமோ
தலைவன் ஒருவன் வழங்கும் பந்தம் சேருமோ
தாலியா……….சலங்கையா…….
தாலியா………சலங்கையா……….

பெண் : சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா
நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா
சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா
நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா
கலைமகள் என்றே மருமகளாகும்
புனித நிலை சேருமோ
தகதீம் தகதீம் எனவே ஆட நேருமோ

பெண் : மங்கல கண்ணகி குங்கும ஜானகி
நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா
நாடக காவிய காவிரி மாதவி
மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா

பெண் : இளமை மேனி இது பெருமையோடு
கொள்ளும் மலர்களோ
சபை ஏறி ஆடி நெஞ்சை
சூறை ஆடும் இரு விழிகளோ

பெண் : ஒரு உள்ளம் தன்னில் தன்னை
அள்ளி வைக்கும் உயர் அங்கமோ
மலர் பள்ளி மீது செய்யும்
கள்ளக் காதல் தரும் சங்கமோ

பெண் : காதலும் என்னை மறுக்குமோ………
வேதமும் என்னை வெறுக்குமோ……..
நாதமே என்னை அணைக்குமோ………
நல்லவன் உள்ளம் மணக்குமோ……….

பெண் : கலையோ என்ன நிலையோ
பொருளோ இறைவன் அருளோ……….!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here