Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Mangala poomazhai pongidum thirumeni
Manavarai naadugiraal
Mangala poomazhai pongidum thirumeni
Manavarai naadugiraal
Sangoli melangal muzhangidum medaiyil
Tamizhisai paadugiraal
Ival tamizhisai paadugiraal

Female : Thamarai thandaaga santhana kudamaaga
Thamarai thandaaga santhana kudamaaga
Thalai kuninthirukkindraal
Poomagal aval maarbil ponnoli
Maangalyam pongida aadugindraal
Ival pongida aadugindraal

Female : Mangala poomazhai pongidum thirumeni
Manavarai naadugiraal
Manavarai naadugiraal

Female : Seedhaiyin ninaivodum thirumagal
Vadivodum thaen nilaa kaanugiraal
Naadhaththin oliyaaga vedhaththin
Mozhiyaaga nallisai paadugiraal
Ival nallisai paadugiraal
Ival nallisai paadugiraal

Female : Mangala poomazhai pongidum thirumeni
Manavarai naadugiraal
Manavarai naadugiraal

Female : Yaenthiya villakkaaga yaengiya nenjinil
Shanthiyai kaangindraal
Neendhiya panjanai nilavodu poongaattru
Vaazhthida vaazhugindraal
Ival vaazhthida vaazhugindraal

Female : Seer perum kannannai
Per perum muruganai
Thaaimaiyil sumakkindraal
Aayiram aasaigal paliththathinaal
Indru aanandham adaigindraal
Indru aanandham adaigindraal

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி
மணவறை நாடுகிறாள்
மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி
மணவறை நாடுகிறாள்
சங்கொலி மேளங்கள் முழங்கிடும் மேடையில்
தமிழிசை பாடுகிறாள்
இவள் தமிழிசை பாடுகிறாள்

பெண் : தாமரைத் தண்டாக சந்தனக் குடமாக
தாமரைத் தண்டாக சந்தனக் குடமாக
தலை குனிந்திருக்கின்றாள்
பூமகள் அவள் மார்பில் பொன்னொளி
மாங்கல்யம் பொங்கிட ஆடுகின்றாள்
இவள் பொங்கிட ஆடுகின்றாள்

பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி
மணவறை நாடுகிறாள்
மணவறை நாடுகிறாள்

பெண் : சீதையின் நினைவோடும் திருமகள்
வடிவோடும் தேன் நிலா காணுகிறாள்
நாதத்தின் ஒலியாக வேதத்தின்
மொழியாக நல்லிசை பாடுகிறாள்
இவள் நல்லிசை பாடுகிறாள்
இவள் நல்லிசை பாடுகிறாள்

பெண் : மங்கல பூமழை பொங்கிடும் திருமேனி
மணவறை நாடுகிறாள்
மணவறை நாடுகிறாள்

பெண் : ஏந்திய விளக்காக ஏங்கிய நெஞ்சினில்
சாந்தியைக் காண்கின்றாள்
நீந்திய பஞ்சணை நிலவோடு பூங்காற்று
வாழ்த்திட வாழுகின்றாள்
இவள் வாழ்த்திட வாழுகின்றாள்

பெண் : சீர் பெரும் கண்ணனை
பேர் பெரும் முருகனை
தாய்மையில் சுமக்கின்றாள்
ஆயிரம் ஆசைகள் பலித்ததினால்
இன்று ஆனந்தம் அடைகின்றாள்
இவள் ஆனந்தம் அடைகின்றாள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here