Manikka Veenaiyin Song Lyrics from Veedu Varai Uravu Film, Starring Jai Ganesh, Sujatha, V. K. Ramasamy, Sukumari and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Maanikka veenaiyin raagam
Kaanikkai thanthu mogam
Maanikka veenaiyin raagam
Kaanikkai thanthu mogam

Male : Isai oonjalilae asaainthaadattum
Viral saerththu thanthiyai meettattumaa

Female : Paalaattrangarai meedhu
Pazhanthottam paarkkindra kangalae
Paathaathi kesangal sugamaana
Raagangal pengalae

Female : Paalaattrangarai meedhu
Pazhanthottam paarkkindra kangalae
Paathaathi kesangal sugamaana
Raagangal pengalae

Male : Thaazhampoovin thegam polae
Thaazhampoovin thegam polae
Thazhuvum koondhalil piranthathu naadham
Thazhuvum koondhalil piranthathu naadham

Female : Maanikka veenaiyin raagam
Kaanikkai thanthu mogam

Female : Karuneela kadal meethu
Themmaangu tamil paadum sangamae
Kalyaana melangal angangae
Olikkindra angamae…

Female : Karuneela kadal meethu
Themmaangu tamil paadum sangamae
Kalyaana melangal angangae
Olikkindra angamae…

Male : Paarkka paarkka ennenna paavam
Paarkka paarkka ennenna paavam
Paniyai paarththae theernthathu thaagam

Male : Maanikka veenaiyin raagam
Kaanikkai thanthu mogam
Female : Isai oonjalilae asaainthaadattum
Viral saerththu thanthiyai meettattumaa

Female : Senthoora thilagangal
Azhakaaga ezhuthungal inthanaal
Sinthaamal sugam kaana
Panjaangam vazhikkaattu anthanaal

Male : Paalum yaenthi pazhangalum yaendhi
Paalum yaenthi pazhangalum yaendhi
Panjanai vanthaal aval per shanthi
Panjanai vanthaal aval per shanthi
Shanthi…..shaanthi…..shanthi…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மாணிக்க வீணையின் ராகம்
காணிக்கை தந்து மோகம்
மாணிக்க வீணையின் ராகம்
காணிக்கை தந்து மோகம்

ஆண் : இசை ஊஞ்சலிலே அசைந்தாடட்டுமா
விரல் சேர்த்து தந்தியை மீட்டட்டுமா

பெண் : பாலாற்றங்கரை மீது
பழத்தோட்டம் பார்க்கின்ற கண்களே
பாதாதி கேசங்கள் சுகமான
ராகங்கள் பெண்களே

பெண் : பாலாற்றங்கரை மீது
பழத்தோட்டம் பார்க்கின்ற கண்களே
பாதாதி கேசங்கள் சுகமான
ராகங்கள் பெண்களே

ஆண் : தாழம்பூவின் தேகம் போலே
தாழம்பூவின் தேகம் போலே.
தழுவும் கூந்தலில் பிறந்தது நாதம்
தழுவும் கூந்தலில் பிறந்தது நாதம்

பெண் : மாணிக்க வீணையின் ராகம்
காணிக்கை தந்து மோகம்

பெண் : கருநீலக் கடல் மீது
தெம்மாங்கு தமிழ் பாடும் சங்கமே
கல்யாண மேளங்கள் அங்கங்கே
ஒலிக்கின்ற அங்கமே…….

பெண் : கருநீலக் கடல் மீது
தெம்மாங்கு தமிழ் பாடும் சங்கமே
கல்யாண மேளங்கள் அங்கங்கே
ஒலிக்கின்ற அங்கமே…….

ஆண் : பார்க்க பார்க்க என்னென்ன பாவம்
பார்க்க பார்க்க என்னென்ன பாவம்
பனியைப் பார்த்தே தீர்ந்தது தாகம்

ஆண் : மாணிக்க வீணையின் ராகம்
காணிக்கை தந்து மோகம்
பெண் : இசை ஊஞ்சலிலே அசைந்தாடட்டுமா
விரல் சேர்த்து தந்தியை மீட்டட்டுமா

பெண் : செந்தூர திலகங்கள்
அழகாக எழுதுங்கள் இந்தநாள்
சிந்தாமல் சுகம் காண
பஞ்சாங்கம் வழிக்காட்டும் அந்தநாள்

ஆண் : பாலும் ஏந்தி பழங்களும் ஏந்தி
பாலும் ஏந்தி பழங்களும் ஏந்தி
பஞ்சணை வந்தாள் அவள் பேர் சாந்தி
பஞ்சணை வந்தாள் அவள் பேர் சாந்தி
சாந்தி……சாந்தி……சாந்தி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here