Singer : Manorama

Music by : Shankar Ganesh

Lyrics by : Subbu Arumugam

Female : Manja kayiru thaali manja kayiru
Manja kayiru thaali manja kayiru
Idhu mahalakshmi rasi manja kayiru
Idhu mahalakshmi rasi manja kayiru

Female : Manja kayiru thaali manja kayiru

Female : Thiruppathi malaiyoram
Sembaruththi panjeduththu
Senja noolil vanthathintha manja kayiru
Idhu srinivasan arulaalae vantha kayiru

Female : Valliyin kannaththilae
Killi killi maalmarugan
Kattiyathu pola intha manja kayiru
Kanji kaamatchi koyil manam konda kayiru

Female : Manja kayiru thaali manja kayiru

Female : Gandhimathu mariyamma karumaari karpagammaa
Vadivaampigai aasi petra kayiru
Idhu varalakshmi pooja manja kayiru
Ramar vanam nadakka seedhai pin thodara
Izhuththittu ponathuvum entha kayiru
Oru ramayanam padicha manja kayiru

Female : Manja kayiru thaali manja kayiru

Female : Meenatchikku sokkanadhar
Katti vacha thaali pola
Maenmaiyulla thaali
Intha manja kayiru
Madhura melamaasi veedhiyilae senja kayiru
Madhura melamaasi veedhiyilae senja kayiru

Female : Muppathu paisa kayittril
Moonu mudichchu pottu vachaa
Appan ammai
Aakki vidum intha kayiru
Idhu adagu vaikka
Mudiyaatha sintha kayiru
Idhu adagu vaikka
Mudiyaatha sintha kayiru

Female : Manja kayiru thaali manja kayiru

Female : Thappaana ennaththilae
Pakkam varum pokkiriya
Thalli nirkka seiyyum
Intha manja kayiru
Idhu thaaikulaththai kaaththu
Varum veli kayiru

Female : Sollaamal odi vantha
Sodigalum ennidaththil
Thuttu thanthu vaangum
Intha manja kayiru avarai
Sattapadi vaazha vaikkum thaali kayiru

Female : Vasukikku valluvaraiyum
Kasthurikku gandhiyaiyum
Paasamodu poottiyathu intha kayiru
Enga paattiyoda paatti thantha manja kayiru

Female : Harichandiran chandramathi
Amponnu nikkaiyilae
Adaiyaalam kaattiyathum intha kayiru
Harichandiran chandramathi
Amponnu nikkaiyilae
Adaiyaalam kaattiyathum intha kayiru
Acham mydhal naalu
Gunamum ulla kayiru

Female : Manja kayiru thaali manja kayiru

Female : Thottu thaali kattiyavar
Vittu vittu odivittaal
Court varai pogum
Intha thaali kayiru
Meendum kudumpamaakki vaikkum sakthi kayiru

Female : Yaaro oruththiyaiyum
Yaaro oruvanaiyum
Heroin-u herovaakkum manja kayiru
Intha rasiyil vaangu
Vaanga thottil kayiru
Intha rasiyil vaangu
Vaanga thottil kayiru

Female : Manja kayiru thaali manja kayiru

Female : Thottaalae shock adikkum
Electrical-u wire-u
Idha thodaamalae shock adikkum
Ponnu thaali kayiru

Female : Paramasivan kazhuththinilae
Paambum oru kayiru
Antha paambai vida bayangaramaam
Paththiniyin kayiru

Female : Manja kayiru thaali manja kayiru

Female : Vaalu paiyan pattam vidura
Noolu kayiru pambara kayiru
Ragasiyamaai thaayaththukku
Avasiyamaam iduppu kayiru

Female : Upaththiravatham thaangikkaama
Ooraivittu kaasi poga
Uththiraatcham pottu kolla
Veluppu kayiru sevappu kayiru

Female : Innum kattukkayiru panthakkayiru
Kaala kazhuththu karuppu kayiru
Antha kayiru intha kayiru
Aasai kayiru anbukkayiru

Female : Entha kayiru kettaalum
Marupathae illai
Intha thaali kayiru mattum
Kadan koduppatheyillai

Female : Entha kayiru kettaalum
Marupathae illai
Intha thaali kayiru mattum
Kadan koduppatheyillai

Female : Manja kayiru thaali manja kayiru
Manja kayiru thaali manja kayiru
Idhu mahalakshmi rasi manja kayiru…..
Idhu mahalakshmi rasi manja kayiru….

பாடகி : மனோரமா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : சுப்பு ஆறுமுகம்

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு
மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு
இது மகாலட்சுமி ராசி மஞ்சக் கயிறு…..
இது மகாலட்சுமி ராசி மஞ்சக் கயிறு…..

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு

பெண் : திருப்பதி மலையோரம்
செம்பருத்தி பஞ்செடுத்து
செஞ்ச நூலில் வந்ததிந்த மஞ்சக் கயிறு
இது ஸ்ரீனிவாசன் அருளாலே வந்தக் கயிறு

பெண் : வள்ளியின் கன்னத்திலே
கிள்ளி கிள்ளி மால்மருகன்
கட்டியது போல இந்த மஞ்சக் கயிறு
காஞ்சி காமாட்சி கோயில் மணம் கொண்ட கயிறு

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு

பெண் : காந்திமதி மாரியம்மா கருமாரி கற்பகம்மா
வடிவாம்பிகை ஆசி பெற்ற கயிறு
இது வரலட்சுமி பூஜை மஞ்சக் கயிறு
ராமர் வனம் நடக்க சீதை பின் தொடர
இழுத்திட்டு போனதுவும் எந்தக் கயிறு
ஒரு ராமாயணம் படிச்ச மஞ்சக் கயிறு…….

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு

பெண் : மீனாட்சிக்கு சொக்கநாதர்
கட்டி வச்ச தாலி போல
மேன்மையுள்ள தாலி
இந்த மஞ்சக் கயிறு
மதுர மேலமாசி வீதியிலே செஞ்சக் கயிறு
மதுர மேலமாசி வீதியிலே செஞ்சக் கயிறு

பெண் : முப்பது பைசா கயிற்றில்
மூணு முடிச்சு போட்டு வச்சா
அப்பன் அம்மை
ஆக்கி விடும் இந்தக் கயிறு
இது அடகு வைக்க
முடியாத சொந்தக் கயிறு
இது அடகு வைக்க
முடியாத சொந்தக் கயிறு

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு

பெண் : தப்பான எண்ணத்திலே
பக்கம் வரும் போக்கிரிய
தள்ளி நிற்க செய்யும்
இந்த மஞ்சக் கயிறு
இது தாய்க்குலத்தை காத்து
வரும் வேலி கயிறு

பெண் : சொல்லாமல் ஓடி வந்த
சோடிகளும் என்னிடத்தில்
துட்டு தந்து வாங்கும்
இந்த மஞ்சக் கயிறு அவரை
சட்டப்படி வாழ வைக்கும் தாலிக் கயிறு….

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு

பெண் : வாசுகிக்கு வள்ளுவரையும்
கஸ்தூரிக்கு காந்தியையும்
பாசமோடு பூட்டியது இந்தக் கயிறு
எங்க பாட்டியோட பாட்டி தந்த மஞ்சக் கயிறு

பெண் : அரிச்சந்திரன் சந்திரமதி
அம்போன்னு நிக்கையிலே
அடையாளம் காட்டியதும் இந்தக் கயிறு
அரிச்சந்திரன் சந்திரமதி
அம்போன்னு நிக்கையிலே
அடையாளம் காட்டியதும் இந்தக் கயிறு
அச்சம் முதல் நாலு
குணமும் உள்ளக் கயிறு

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு

பெண் : தொட்டுத் தாலி கட்டியவர்
விட்டு விட்டு ஓடிவிட்டால்
கோர்ட் வரை போகும்
இந்த தாலிக் கயிறு
மீண்டும் குடும்பமாக்கி வைக்கும் சக்தி கயிறு

பெண் : யாரோ ஒருத்தியையும்
யாரோ ஒருவனையும்
ஹீரோயினு ஹீரோவாக்கும் மஞ்சக் கயிறு
இந்த ராசியில் வாங்கு
வாங்க தொட்டில் கயிறு
இந்த ராசியில் வாங்கு
வாங்க தொட்டில் கயிறு

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு

பெண் : தொட்டாலே ஷாக் அடிக்கும்
எலக்ட்ரிக்கலு ஒயரு
இத தொடாமலே ஷாக் அடிக்கும்
பொன்னு தாலிக் கயிறு

பெண் : பரமசிவன் கழுத்தினிலே
பாம்பும் ஒரு கயிறு
அந்த பாம்பை விட பயங்கரமாம்
பத்தினியின் கயிறு

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு

பெண் : வாலு பையன் பட்டம் விடுற
நூலு கயிறு பம்பரக் கயிறு
ரகசியமாய் தாயத்துக்கு
அவசியமாம் இடுப்புக் கயிறு

பெண் : உபத்திரவம் தாங்கிக்காம
ஊரைவிட்டு காசி போக
உத்திராட்சம் போட்டுக் கொள்ள
வெளுப்பு கயிறு செவப்புக்கயிறு

பெண் : இன்னும் கட்டுக்கயிறு பந்தக்கயிறு
காளக் கழுத்து கறுப்புக் கயிறு
அந்தக் கயிறு இந்தக் கயிறு
ஆசைக் கயிறு அன்புக்கயிறு

பெண் : எந்த கயிறு கேட்டாலும்
மறுப்பதே இல்லை
இந்த தாலிக் கயிறு மட்டும்
கடன் கொடுப்பதேயில்லை

பெண் : எந்த கயிறு கேட்டாலும்
மறுப்பதே இல்லை
இந்த தாலிக் கயிறு மட்டும்
கடன் கொடுப்பதேயில்லை

பெண் : மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு
மஞ்சக் கயிறு தாலி மஞ்சக் கயிறு
இது மகாலட்சுமி ராசி மஞ்சக் கயிறு…..
இது மகாலட்சுமி ராசி மஞ்சக் கயிறு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here