Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Bharathaththil puththa madham veerundri iruntha kaalam
Padalipuththiraththil oru aadalarasi
Angangal thirandiruntha
Azhagu silai vaasavathaththai

Female : Mannargal vanangum silaiyaanaen
Ullangal mayangum kalaiyaanaen
Kannazhagil aasai kondu
Kattilukku yaekkam kondu
Enni enni bodhai kondu

Female : Mannargal vanangum silaiyaanaen

Female : Vaayidhazh madhurasaththil aada vaippaen
Vaarththeduththa kinnangalil ooravaippaen
Maaya sugangalellaam malara vaippaen
Maaya sugangalellaam malara vaippaen
Mattroruththi illaiyendru pesa vaippaen

Female : Mannargal vanangum silaiyaanaen

Male : Puththam saranam kachchaami
Sangam saranam kachchaami
Dharmam saranam kachchaami

Female : Avargal mannargal en adimaigal
Ivano azhagaanavan
Ivanai thedi en kangal pogindrana
Thodarnthu en ullamum pogirathu
Yaen naanum ponaalenna…

Female : Kaana vaiththana kangal un maeniyai
Kandu kondana vedhaantha nyaaniyai
Aada vaiththana anantha penmaiyai
Arinthu kondana inbaththin unmaiyai

Male : Kangalin kaatchi poiyyae
Kadhalum poiyyir poiyyae
Penmaiyin azhagum poiyyae
Pesidum mozhiyum poiyyae

Female : Azhagiya mangai thirumugam kandu
Anbu nirainthoru inbamadainthu
Pazhagiya panjanai paal pazham undu
Paarththa pinnaal varum nyaanamum undu
Azhaikkindraen swaami azhaikkindraen

Male : Bogam azhaikindrathu
Buddhanukku velaiyilli
Mogam azhaikkindrathu
Munivanukku velaiyillai
Kaalam azhaikkattum kann thiranthu paarkkattum
Varugindraen penmaiyae varugindraen

Male : Aadinaal aval aadinaal
Kodai vasanthamendrum
Kulirendrum mazhaiyendrum
Odiya kaalangal oduvathariyaamal

Male : Aadinaal ulamaadinaal udalaadinaal
Thaanaadinaal thallaadinaal

Female : Ilamai poe vittathu azhagu poe vittathu
Yaarennai theduvaar
Ini yaarennai theduvaar

Male : Puththam saranam kachchaami
Sangam saranam kachchaami
Dharmam saranam kachchaami

Female : Vediththa malar azhaiththapothu
Varavillaiyae saami
Vizhuntha malar kaanbatharkku vanththaeno

Male : Kadhalai poi endraen
Kavanikkavillai neeyae
Azhagellaam poi endraenae
Ariyavum illai neeyae

Male : Poiyendrum ariyumunnae
Bogigal varuvaar thaayae
Poiyendru arintha pinthaan
Nyaanigal varuvaar thaayae

Both : Puththam saranam kachchaami
Sangam saranam kachchaami
Dharmam saranam kachchaami

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பாரதத்தில் புத்த மதம் வேரூன்றி இருந்த காலம்
பாடலிபுத்திரத்தில் ஒரு ஆடலரசி
அங்கங்கள் திரண்டிருந்த
அழகுச் சிலை வாசவதத்தை

பெண் : மன்னர்கள் வணங்கும் சிலையானேன்
உள்ளங்கள் மயங்கும் கலையானேன்
கண்ணழகில் ஆசை கொண்டு
கட்டிலுக்கு ஏக்கம் கொண்டு
எண்ணி எண்ணி போதை கொண்டு

பெண் : மன்னர்கள் வணங்கும் சிலையானேன்

பெண் : வாயிதழ் மதுரசத்தில் ஆட வைப்பேன்
வார்த்தெடுத்த கிண்ணங்களில் ஊறவைப்பேன்
மாயச் சுகங்களெல்லாம் மலர வைப்பேன்
மாயச் சுகங்களெல்லாம் மலர வைப்பேன்
மற்றொருத்தி இல்லையென்று பேச வைப்பேன்

பெண் : மன்னர்கள் வணங்கும் சிலையானேன்

ஆண் : புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி……

பெண் : அவர்கள் மன்னர்கள் என் அடிமைகள்
இவனோ அழகானவன்
இவனைத் தேடி என் கண்கள் போகின்றன
தொடர்ந்து என் உள்ளமும் போகிறது
ஏன் நானும் போனாலென்ன…..

பெண் : காண வைத்தன கண்கள் உன் மேனியை
கண்டு கொண்டன வேதாந்த ஞானியை
ஆட வைத்தன ஆனந்தப் பெண்மையை
அறிந்து கொண்டன இன்பத்தின் உண்மையை

ஆண் : கண்களின் காட்சி பொய்யே
காதலும் பொய்யிற் பொய்யே
பெண்மையின் அழகும் பொய்யே
பேசிடும் மொழியும் பொய்யே……

பெண் : அழகிய மங்கை திருமுகம் கண்டு
அன்பு நிறைந்தொரு இன்பமடைந்து
பழகிய பஞ்சணை பால் பழம் உண்டு
பார்த்த பின்னால் வரும் ஞானமும் உண்டு
அழைக்கின்றேன் ஸ்வாமி அழைக்கின்றேன்

ஆண் : போகம் அழைக்கின்றது
புத்தனுக்கு வேலையில்லை
மோகம் அழைக்கின்றது
முனிவனுக்கு வேலையில்லை
காலம் அழைக்கட்டும் கண் திறந்து பார்க்கட்டும்
வருகின்றேன் பெண்மையே வருகின்றேன்

ஆண் : ஆடினாள் அவள் ஆடினாள்
கோடை வசந்தமென்றும்
குளிரென்றும் மழையென்றும்
ஓடிய காலங்கள் ஓடுவதறியாமல்

ஆண் : ஆடினாள் உளமாடினாள் உடலாடினாள்
தானாடினாள் தள்ளாடினாள்

பெண் : இளமை போய்விட்டது அழகு போய்விட்டது
யாரென்னைத் தேடுவார்
இனி யாரென்னை தேடுவார்

ஆண் : புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி……

பெண் : வெடித்த மலர் அழைத்தபோது
வரவில்லையே ஸ்வாமி
விழுந்த மலர் காண்பதற்கு வந்ததேனோ

ஆண் : காதலைப் பொய் என்றேனே
கவனிக்கவில்லை நீயே
அழகெல்லாம் பொய் என்றேனே
அறியவும் இல்லை நீயே

ஆண் : பொய்யென்று அறியுமுன்னே
போகிகள் வருவார் தாயே
பொய்யென்று அறிந்த பின்தான்
ஞானிகள் வருவார் தாயே…..

இருவர் : புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here