Singers : P. Susheela and Ilayaraja

Music by : Ilayaraja

Female : Aariroo aaroo aaraariroo
Aariroo aaroo aaraariroo

Female : Mannavar paadum thamizh pirandha
Thenpaandi muthae muthae
Punniyar thedum puvi pirandha
Poo manjal kothae kothae

Female : Unnai sontham kolla
Andha mannan illae
Naamum thangum idam adhu sondhamillai
Aaariroo aaroo aaraariroo
Aariroo aaroo aaraariroo

Female : Kedu kettu ponaalum
Manam kettu mattum pogaathu
Maaru vathi ponaalum
Thaayin manasu vathi pogathu
Vaadamalli unnai kaathiruppen
Namma saami thunai naan paarthiruppen

Female : Ver oruthi veetu vaasalilae
Kai neeti naan poyi ninnathilla
Thaer izhukka ooru veedhiyilae
Peru kettu poga yedhum kettadhillae

Female : Saamiyum kann thirakkum
Kaalam varai poruthiruppom
Varunthathae varum kaalam
Paadum ezhaikkuthaan

Female : Mannavar paadum thamizh pirantha
Thenpaandi muthae muthae
Punniyar thaedum puvi pirantha
Poo manjal

Male : Unnai sondha kolla
Indha mannan undu
Nee vandha idam inbam thangum angu
Aariroo aaroo aaraariroo
Aariroo aaroo aaraariroo

Male : Nithammoru thunbam vandhu
Ezhai veedugalil kadhavai thattum
Naalum oru thukkam vandhu
Ezhai maadhargalin nenjai thattum
Ezhu naalum ingu velli illa
Nalla naalum ini thalli illa

Male : Aanai katti vaazhum mannavanum
Un aanai kekka vaasalil kaathiruppaan
Saenai kondu vandhu selvargalum
Oru saedhi solla unnai ethirpaarthirupaar
Kannaeru vandhuvidum kaniyae un kannazhagu
Varungaalam namadhae thaan vaadadhae kannae

Male : Mannavar paadum thamizh pirantha
Thenpaandi muthae muthae
Punniyar thedum puvi pirantha
Poo manjal kothae kothae

Male : Unnai sondha kolla
Indha mannan undu
Nee vandha idam inbam thangum angu
Aariroo aaroo aaraariroo
Aariroo aaroo aaraariroo
Aariroo aaroo aaraariroo
Aariroo aaroo aaraariroo

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆரிரோஆரோ ஆராரிரோ
ஆரிரோஆரோ ஆராரிரோ..

பெண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த
தென்பாண்டி முத்தே முத்தே
புண்ணியர் தேடும் புவி பிறந்த
பூ மஞ்சள் கொத்தே கொத்தே

பெண் : உன்னை சொந்தம் கொள்ள
அந்த மன்னன் இல்லை
நாமும் தங்கும் இடம் அது சொந்தமில்ல
ஆரிரோஆரோ ஆராரிரோ
ஆரிரோஆரோ ஆராரிரோ….

பெண் : கேடு கேட்டு போனாலும் மனம்
கெட்டு மட்டும் போகாது
மாரு வத்திப் போனாலும் தாயின்
மனசு வத்தி போகாது
வாடாமல்லி உன்னை காத்திருப்பேன் நம்ம
சாமி துணை நான் பாத்திருப்பேன்

பெண் : வேறொருத்தி வீட்டு வாசலிலே
கை நீட்டி நான் போயி நின்னதில்ல
தேரிழுக்கும் ஊரு வீதியிலே
பேரு கெட்டு போக ஏதும் கேட்டதில்ல

பெண் : சாமியும்தான் கண் திறக்கும்
காலம் வரை பொறுத்திருப்போம்
வருந்தாதே வரும் காலம் பாடும் ஏழைக்குத்தான்

பெண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த
தென்பாண்டி முத்தே முத்தே
புண்ணியர் தேடும் புவி பிறந்த
பூ மஞ்சள்…..

ஆண் : உன்னை சொந்தம் கொள்ள
இந்த மன்னன் உண்டு
நீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு
ஆரிரோஆரோ ஆராரிரோ
ஆரிரோஆரோ ஆராரிரோ….

ஆண் : நித்தமொரு துன்பம் வந்து ஏழை
வீடுகளில் கதவைத் தட்டும்
நாளுமொரு துக்கம் வந்து ஏழை
மாதர்களின் நெஞ்சைத் தட்டும்
ஏழு நாளும் இங்கு வெள்ளி இல்ல
நல்ல நாளும் இனி தள்ளி இல்ல

ஆண் : ஆனைக் கட்டி வாழும் மன்னவனும் உன்
ஆணை கேக்க வாசலில் காத்திருப்பான்
சேனைக் கொண்டு வந்து செல்வர்களும் ஒரு
சேதி சொல்ல உன்னை எதிர்ப்பார்த்திருப்பார்

ஆண் : கண்ணேறு வந்துவிடும் கனியே
உன் கண்ணழகு
வருங்காலம் நமதேதான் வாடாதே கண்ணே

ஆண் : மன்னவர் பாடும் தமிழ் பிறந்த
தென்பாண்டி முத்தே முத்தே
புண்ணியர் தேடும் புவி பிறந்த
பூ மஞ்சள் கொத்தே கொத்தே

ஆண் : உன்னை சொந்தம் கொள்ள
இந்த மன்னன் உண்டு
நீ வந்த இடம் இன்பம் தங்கும் அங்கு
ஆரிரோஆரோ ஆராரிரோ
ஆரிரோஆரோ ஆராரிரோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here