Singer : C. S. Jayaraman

Music by : K. H. Reddy

Lyrics by : Kannadasan

Male : Mannir pirandhan
Mannuzhudhu pon padaithaan
Than idathai izhandhavanaai
Thaniyidathae thalai saaithaan

Male : Thanporulai thaan thirudi
Thalai pizhaikka thaavugindraan
Vaazhugindra kaalam ellaam
Maganukkae vaazhndhirundhaan

Male : Vazhi payanam mudindha pinnum
Magan vaazha thunai purindhaan

Male : Panbu izhandhaan ven jiraiyil
Pachai mayil vaadugindraal
Pennedutha perunthalaivan
Pirindhu vitta nilai ariyaal
Theeyutta selgindra peran kanduvittaan
Neeyutti valarpadharkku naanundu
Unaiyutti valargindra oruvar pirindhu vittaan

Male : Paarendraan thandhai paarthaan
Manam padhaithaan
Yaar sadalam pettravana
Ammammaa innilaiyaa
Seer koduthaan mugam paarka thirumbinaan

Male : Paarvaiyilum thalai paarkka mudiyavillai
Kaal paarthaan kan pudhaithu neer vadithaan
Kalanginaan mudividathil
Mannai valarthavanae mannukkae uramanaan
Mannukkae uramanaan

பாடகர் : சி . எஸ். ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மண்ணிற் பிறந்தான்
மண்ணுழுது பொன் படைத்தான்
தன் இடத்தை இழந்தவனாய்
தனியிடத்தே தலை சாய்த்தான்……

ஆண் : தன் பொருளைத் தான் திருடித்
தலை பிழைக்கத் தாவுகின்றான்
வாழுகின்ற காலமெல்லாம்
மகனுக்கே வாழ்ந்திருந்தான்…..

ஆண் : வழிப் பயணம் முடிந்த பின்னும்
மகன் வாழத் துணை புரிந்தான்

ஆண் : பணமிழந்தான் வெஞ்சிறையில்
பச்சை மயில் வாடுகின்றாள்
பெண்ணெடுத்த பெருந்தலைவன்
பிரிந்து விட்ட நிலையறிந்தான்
தீயூட்டச் செல்கின்ற பேரன் கண்டுவிட்டான்
நீயூட்டி வளர்ப்பதற்கு நானுண்டு…..
உனையூட்டி வளர்க்கின்ற ஒருவன் பிரிந்து விட்டான்

ஆண் : பாரென்றான் தந்தை பார்த்தான்
மனம் பதைத்தான்
யார் சடலம் பெற்றவனா
அம்மம்மா இந்நிலையா
சீர் கொடுத்தாள் முகம் பார்க்கத் திரும்பினான்

ஆண் : பார்வையிலும் தலை பார்க்க முடியவில்லை
கால் பார்த்தான் கண் புதைத்து நீர் வடித்தான்
கலங்கினான் முடிவிடத்தில்
மண்ணை வளர்த்தவனே மண்ணுக்கே உரமானான்…..
மண்ணுக்கே உரமானான்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here