Manushanai Paathittu Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by K. Jamunarani and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.
Singer : K. Jamunarani
Music Director : T. R. Rajagopal
Lyricist : Pattukottai Kalyanasundaram
Female : Manushanai paathittu
Unnaiyum paatha
Maattramillaedaa raaja
Emmanasilae pattadhai velyilae solluren
Vandhadhu varattum podaa
Sila manushanai paathittu
Unnaiyum paatha
Maattramillaedaa raaja
Emmanasilae pattadhai velyilae solluren
Vandhadhu varattum podaa
Female : Ulladhai sonna
Odhaithaan kidaikkum
Ulagam idhuthaanda
Raajaa ulagam idhuthaanda
Ulladhai sonna
Odhaithaan kidaikkum
Ulagam idhuthaanda
Raajaa ulagam idhuthaanda
Female : Ullathunivodu
Poi solluvorkku
Ullaasa puvithaanda
Idhu ullaasa puvithaanda
Female : Vasadhi irukkiravan tharamattaan
Avanai vayiru pasikkiravan vidamattaan
Vasadhi irukkiravan tharamattaan
Avanai vayiru pasikkiravan vidamattaan
Vaanathai villaavalaichu katturennu
Vaayalae solluvaan seiyamattaan
Female : Manushanai paathittu
Unnaiyum paatha
Maattramillaedaa raaja
Emmanasilae pattadhai velyilae solluren
Vandhadhu varattum podaa
Dialogue : …………….
Female : Pallikkodam illadha oorukku
Payanam porendaa
Naan payanam porendaa
Female : Angae naanum vaarendaa
Female : Pallikkodam illadha oorukku
Payanam porendaa
Veliyae padikka vendiyathu neriya irukku
Padichittu vaarendaa
Silar padikka marandhadhu neriya irukku
Padichittu vaarendaa
Female : Haiyaa
Manushanai paathittu
Unnaiyum paatha
Maattramillaedaa raaja
Emmanasilae pattadhai velyilae solluren
Vandhadhu varattum podaa
Female : Ezhudhi padichu ariyadhavanthaan
Uzhudhu uzhaichu sorum poduraan
Ezhudhi padichu ariyadhavanthaan
Uzhudhu uzhaichu sorum poduraan
Ellaam padichavan edhedho pesi
Nalla nattai kooru podugiraan
Ivan soru podugiraan
Avan kooru poduraan
Female : Haiyaa
Manushanai paathittu
Unnaiyum paatha
Maattramillaedaa raaja
Emmanasilae pattadhai velyilae solluren
Vandhadhu varattum podaa
பாடகி : கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால்
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பெண் : மனுசனைப் பாத்திட்டு
உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா
எம் மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா
சில மனுசனைப் பாத்திட்டு
உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா
எம் மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா
பெண் : உள்ளதைச் சொன்னா
ஒதைதான் கெடைக்கும்
உலகம் இதுதாண்டா
ராஜா உலகம் இதுதாண்டா
உள்ளதைச் சொன்னா
ஒதைதான் கெடைக்கும்
உலகம் இதுதாண்டா
ராஜா உலகம் இதுதாண்டா
பெண் : உள்ளத் துணிவோட
பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புவிதாண்டா
இது உல்லாச புவிதாண்டா…
பெண் : வசதியிருக்கிறவன் தரமாட்டான்
அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வசதியிருக்கிறவன் தரமாட்டான்
அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்
பெண் : மனுசனைப் பாத்திட்டு
உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா
எம் மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா
வசனம் : …………
பெண் : பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா
நான் பயணம் போறேண்டா
பெண் : அங்கே நானும் வாரேண்டா…
பெண் : பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா…….
வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா
சிலர் படிக்க மறந்தது நெறய இருக்கு
படிச்சிட்டு வாரேண்டா……..
பெண் : ஹையா
சில மனுசனைப் பாத்திட்டு
உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா
எம் மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா
பெண் : எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது உழைச்சு சோறும் போடுறான்..
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது உழைச்சு சோறும் போடுறான்..
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுகிறான்
இவன் சோறு போடுகிறான் அவன் கூறு போடுறான்.
பெண் : ஹையா
சில மனுசனைப் பாத்திட்டு
உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா
எம் மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா