Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : T. M. Soundararajan

Lyrics by : Vaali

Male : Maappillai sirkku vaazhththukkal
Sila manimozhi solvaen kettukko
Maadaai uzhaippathu un bharam
Adhai lesaai ninaippathu samsaaram

Male : Maappillai sirkku vaazhththukkal
Sila manimozhi solvaen kettukko

Female : Mangala pennukku vaazhththukkal
Sila manimozhi solvaen kettukko
Veettai kaappathu pen paadu
Idhai kaattilumaa intha aanpaadu….

Female : Mangala pennukku vaazhththukkal
Sila manimozhi solvaen kettukko

Male : Yaenadi pennae thaamarai kannae
Ennidam intha veeraappu
Kaalaiyar seiyyum kaariyam yaavum
Kaniyar seithaal pollaappu

Male : Pennmai poovin jaathi endraanathu
Menmai maari ponaal ennaavathu nee
Pani vizhi mayangida kani mozhi pazhagidum
Kili mozhiyinam ena puriyaatho…

Male : Maappillai sirkku vaazhththukkal
Sila manimozhi solvaen kettukko

Female : Paavaiyar endraal kevalam endru
Pottikku vanthaal vaarungal
Paavaiyar endraal kevalam endru
Pottikku vanthaal vaarungal
Aduppadi poona jeyippathu aanai
Nadappathai mudivil paarungal

Female : Deivam meniyil paathi pen kondathu
Ungal sakthi yaavum yaar thanthathu
Intha paramparai kathaigalai purinthavar therinthavar
Vambukkum thumbukkum varalaamo

Female : Mangala pennukku vaazhththukkal
Sila manimozhi solvaen kettukko

Male : Beemanum nalanum pengalai polae
Samaiyal seithu pereduththaar
Senaiyum nadaththi paanaiyum piththa
Jaathikku iniyo penn kulaththaar

Female : Mangai kannil undu vel enbathu
Veeram illai endru yaar sonnathu

Male : Idhil unakkulla perumaiyum
Enakkulla thiramaiyum
Avaravar manathukku theriyaatho

Female : Idhai varugindra kalangal
Mudivurai vazhangattum
Poovaiyar menmaigal puriyaatho

Male : Theriyaatho…..
Female : Puriyaatho…
Male : Theriyaatho…..oo……
Female : Puriyaatho…oo……

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. எம். சௌந்தரராஜன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ
மாடாய் உழைப்பது உன் பாரம் அதை
லேசாய் நினைப்பது சம்சாரம்……

ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ

பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ
வீட்டைக் காப்பது பெண் பாடு
இதை காட்டிலுமா இந்த ஆண் பாடு….

பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ

ஆண் : ஏனடி பெண்ணே தாமரைக் கண்ணே
என்னிடம் இந்த வீராப்பு
காளையர் செய்யும் காரியம் யாவும்
கன்னியர் செய்தால் பொல்லாப்பு

ஆண் : பெண்மை பூவின் ஜாதி என்றானது
மென்மை மாறிப் போனால் என்னாவது நீ
பனி விழி மயங்கிட கனி மொழி பழகிடும்
கிளி மொழியினம் என புரியாதோ….

ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ

பெண் : பாவையர் என்றால் கேவலம் என்று
போட்டிக்கு வந்தால் வாருங்கள்
பாவையர் என்றால் கேவலம் என்று
போட்டிக்கு வந்தால் வாருங்கள்
அடுப்படி பூனை ஜெயிப்பது ஆணை
நடப்பதை முடிவில் பாருங்கள்

பெண் : தெய்வம் மேனியில் பாதி பெண் கொண்டது
உங்கள் சக்தி யாவும் யார் தந்தது
இந்த பரம்பரை கதைகளை புரிந்தவர் தெரிந்தவர்
வம்புக்கும் தும்புக்கும் வரலாமோ…..

பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்
சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ

ஆண் : பீமனும் நளனும் பெண்களைப் போலே
சமையல் செய்து பேரெடுத்தார்
சேனையும் நடத்தி பானையும் பிடித்த
ஜாதிக்கு இணையோ பெண் குலத்தார்

பெண் : மங்கை கண்ணில் உண்டு வேல் என்பது
வீரம் இல்லை என்று யார் சொன்னது

ஆண் : இதில் உனக்குள்ள பெருமையும்
எனக்குள்ள திறமையும்
அவரவர் மனதுக்கு தெரியாதோ….

பெண் : இதை வருகின்ற காலங்கள்
முடிவுரை வழங்கட்டும்
பூவையர் மேன்மைகள் புரியாதோ

ஆண் : தெரியாதோ……..
பெண் : புரியாதோ…..
ஆண் : தெரியாதோ…..ஓ….
பெண் : புரியாதோ…..ஓ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here