Singers : S. P. Balasubrahmanyam and Devi

Music by : Ilayaraja

Female : Maragadha kutti maragadha kutti
Maan kutti engae

Female : Maragadha kutti maragadha kutti
Maan kutti engae
Pon mani katti azhagiya thottil
Aadattum ingae

Female Chorus : Maragadha kutti maragadha kutti
Maan kutti engae
Pon mani katti azhagiya thottil
Aadattum ingae

Female : Mullai poo thaanaa
Moondraam pirai thaanaa
Un thaamarai paadham naaladi vaithaal
Vaangudhae moochu ada enna aachu

Female Chorus : Maragadha kutti maragadha kutti
Maan kutti engae
Pon mani katti azhagiya thottil
Aadattum ingae

Male : Vaanavillil thooli katti tharuvenae
Dhevadhaiya aatti vida solvenae

Female Chorus : Aa… aa… aa… aa…

Male : Vennilavil kinnam ondru seivaenae
Sooriyanai ootti vida cholvenae
Veerargalin kadhai solli valarthaal
Vetrigalai kondu vandhu kuvippaan
Yevvyirkkum anbu seidhu irundhaal
Undhan pillai aayudhathai mannil thookki yerivaan

Male Chorus : Manakkudhadi mazhalaiyin vaasam

Female Chorus : Inikkudhadi manasukkul thaai paasam

Male Chorus : Kudhikkudhaa

Female Chorus : Kudhikkudhaa vayitril sandhosham

Male : Maragadha kutti maragadha kutti
Maan kutti engae
Pon mani katti azhagiya thottil
Aadattum ingae
Mullai poo thaanaa moondraam pirai thaanaa
Un thaamarai paadham naaladi vaithaal
Vaangudhae moochu ada enna aachu

Male Chorus : Maragadha kutti maragadha kutti
Maan kutti engae
Female Chorus : Pon mani katti azhagiya thottil
Aadattum ingae

Female : Sembaruthi poovukkindru thirunaalo
Saerthu vaitha thaenai alli tharuvaalo

Female Chorus : Aa… aa… aa… aa…

Female : Seemandhatthil seer varisai peruvaalo
Seemaikkellaam kai valaiyal tharuvaalo
Pothi pothi nadakkanum mayilae
Pillai ondru kodukkanum kuyilae
Kattil vittu odhunganum thaniyae
Aada pogum thottil pakkam uranganum iniyae

Female Chorus : Valarudhadi undhan uyirodu
Kanmanikkum azhagiya paer thaedu
Padichukko padichukko pudhu pudhu thaalaattu

Male : Maragadha kutti maragadha kutti
Maan kutti engae
Female : Pon mani katti azhagiya thottil
Aadattum ingae

Male : Mullai poo thaanaa moondraam pirai thaanaa

Female : Un thaamarai paadham naaladi vaithaal
Vaangudhae moochu ada enna aachu

Chorus : Maragadha kutti maragadha kutti
Maan kutti engae
Pon mani katti azhagiya thottil
Aadattum ingae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் தேவி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே

பெண் : மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே

பெண் குழு : மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே

பெண் : முல்லைப் பூ தானா
மூன்றாம் பிறை தானா
உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால்
வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு

பெண் குழு : மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே

ஆண் : வானவில்லில் தூளி கட்டித் தருவேனே
தேவதையை ஆட்டி விடச் சொல்வேனே

பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : வெண்ணிலவில் கிண்ணம் ஒன்று செய்வேனே
சூரியனை ஊட்டி விடச் சொல்வேனே
வீரர்களின் கதை சொல்லி வளர்த்தால்
வெற்றிகளை கொண்டு வந்து குவிப்பான்
எவ்வுயிர்க்கும் அன்பு செய்து இருந்தால்
உந்தன் பிள்ளை ஆயுதத்தை மண்ணில் தூக்கி எறிவான்

ஆண் குழு : மணக்குதடி மழலையின் பூ வாசம்

பெண் குழு : இனிக்குதடி மனசுக்குள் தாய்ப் பாசம்

ஆண் குழு : குதிக்குதா

பெண் குழு : குதிக்குதா வயிற்றில் சந்தோஷம்

ஆண் : மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே
முல்லைப் பூ தானா மூன்றாம் பிறை தானா
உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால்
வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு

ஆண் குழு : மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே

பெண் குழு : பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே

பெண் : செம்பருத்திப் பூவுக்கின்று திருநாளோ
சேர்த்து வைத்த தேனை அள்ளித் தருவாளோ

பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ…

பெண் : சீமந்தத்தில் சீர் வரிசை பெறுவாளோ
சீமைக்கெல்லாம் கை வளையல் தருவாளோ
பொத்திப் பொத்தி நடக்கணும் மயிலே
பிள்ளை ஒன்று கொடுக்கணும் குயிலே
கட்டில் விட்டு ஒதுங்கணும் தனியே
ஆடப் போகும் தொட்டில் பக்கம் உறங்கணும் இனியே

பெண் குழு : வளருதடி உந்தன் உயிரோடு
கண்மணிக்கு அழகிய பேர் தேடு
படிச்சுக்கோ படிச்சுக்கோ புதுப் புது தாலாட்டு

ஆண் : மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பெண் : பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே

ஆண் : முல்லைப் பூ தானா மூன்றாம் பிறை தானா

பெண் : உன் தாமரைப் பாதம் நாலடி வைத்தால்
வாங்குதே மூச்சு அட என்ன ஆச்சு

குழு : மரகதக் குட்டி மரகதக் குட்டி
மான் குட்டி எங்கே
பொன் மணி கட்டி அழகிய தொட்டில்
ஆடட்டும் இங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here