Singers : Yuvan Shankar Raja and Siddharth

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Madhan Karky

Male : Por yedhum illai
Veredhum illai
Aanaalum boomi
Adhirvadhu yen..?solladi?

Male : Vinmeengal illai
Nilaavum illai
Aanaalum vaanam
Kulirvadhu yen..?solladi?

Male : Imaigal moodamalae
Irudhayam thaan paarkudha
Irupadhu kaal paaichalil
Iru vizhiyum oodudha

Male : Marubadi nee
Marubadi nee

Male : Por yedhum illai
Veredhum illai
Aanaalum boomi
Adhirvadhu yen..?solladi?

Male : Vinmeengal illai
Nilaavum illai
Aanaalum vaanam
Kulirvadhu yen..?solladi?

Male : Adhikaalai kadhiragavae
Udhithaayae pudhidhaakkave
Unnaalae vidivondru ennil pennae

Male : Thadamilla manalaagavo
Alaiyilla punal aagavoo
Vaazhndhenae nee paadham vaikkum munnae

Male : Peralaiyaai endhan vaanathin theenda vandhaaya
Kaar mugilaai endhan nenjathin aazham thaanda vandhaaya

Male : Kaatru ena ennai nee thooimai sedhu odi povaaya
Kaayam ena eppodhum nee en thozhi aavaaya

Male : Kelvi kokkiyil
Maati konda nee
Endhan boomiyil
Marubadi nee marubadi nee

Male : Pirindhaalum piriyamalae
Oru poovum udhiramalae
En nenjin kaadengum
Endrum neeyae

Male : Yugam ellam kadanthaalumae
Thaniyaai naan nadanthaalumae
En theeyin nizhalaga endrum neeyae

Male : Vaasanaigal kodi
En vaanil veesa moochilandhenae
Un varavin ottrai vaasathukaaga kaathirunthenae
Swaasam ena unnai utkollum seigai meemigai illai
Kaadhal ena naan unnai sonnal nyaayamum illai

Male : Sollil sikkidaa
Artham pola nee
Kannil sikkinaai
Marubadi nee marubadi nee

பாடகர்கள்  : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சித்தார்த்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : போர் ஏதும் இல்லை
வேறேதும் இல்லை
ஆனாலும் பூமி
அதிர்வது ஏன்? சொல்லடீ!

ஆண் : விண்மீன்கள் இல்லை
நிலாவும் இல்லை
ஆனாலும் வானம்
குளிர்வது ஏன்? சொல்லடீ

ஆண் : இமைகள் மூடாமலே
இருதயம் தான் பார்க்குதா
இருபது கால்பாய்ச்சலில்
இரு விழியும் ஓடுதா

ஆண் : மறுபடி நீ
மறுபடி நீ

ஆண் : போர் ஏதும் இல்லை
வேறேதும் இல்லை
ஆனாலும் பூமி
அதிர்வது ஏன்? சொல்லடீ!

ஆண் : விண்மீன்கள் இல்லை
நிலாவும் இல்லை
ஆனாலும் வானம்
குளிர்வது ஏன்? சொல்லடீ

ஆண் : அதிகாலை கதிராகவே
உதித்தாயே புதிதாக்கவே
உன்னாலே விடிவொன்று
என்னில் பெண்ணே

ஆண் : தடமில்லா மணலாகவோ
அலையில்லா புனலாகவோ
வாழ்ந்தேனே நீ பாதம் வைக்கும் முன்னே

ஆண் : பேரலையாய் எந்தன் வானத்தின் தீண்ட வந்தாயா?
கார்முகிலாய் எந்தன் நெஞ்சத்தின்
ஆழம் தாண்ட வந்தாயா?

ஆண் : காற்று என என்னை
நீ தூய்மை செய்து
ஓடி போவாயா
காயம் என எப்போதும் நீ
என் தோழி ஆவாயா?

ஆண் : கேள்விக் கொக்கியில்
மாட்டிக் கொண்ட நீ
எந்தன் பூமியில்
மறுபடி நீ மறுபடி நீ

ஆண் : பிரிந்தாலும் பிரியாமலே
ஒரு பூவும் உதிராமலே
என் நெஞ்சின் காடெங்கும்
என்றும் நீயே

ஆண் : யுகம் எல்லாம் கடந்தாலுமே
தனியாய் நான் நடந்தாலுமே
என் தீயின் நிழலாக என்றும் நீயே

ஆண் : வாசனைகள் கோடி
என் வானில் வீச மூச்சிழந்தேனே
உன் வரவின் ஒற்றை
வாசத்துக்காக காத்திருந்தேன்
சுவாசம் என உன்னை
உட்கொள்ளும் செய்கை
மீமிகை இல்லை
காதல் என நான் உன்னை சொன்னால்
நியாயமும் இல்லை

ஆண் : சொல்லில் சிக்கிடா
அர்த்தம் போல நீ
கண்ணில் சிக்கினாய்
மறுபடி நீ
மறுபடி நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here