Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Humming…

Male : Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyo
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyo

Female : Illamai muluthum unathu veedu
Eduthu rasithu kavithai paadu
Illamai muluthum unathu veedu
Eduthu rasithu kavithai paadu
Paadumpothu asai nooru poga poga inbam veru

Male : Kannangalil minnum thiratchai pazham
Vanna idazh sinthum kovaipazham
Kann irandil ulla asaipazham
Kadhal pazham adhu maathulam pazham
Female : Ahh
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyae
Maathulam…

Male : Iravil nilavu sirikum pothu
Irandu uyirgal thudika vendum
Iravil nilavu sirikum pothu
Irandu uyirgal thudika vendum
Thudikum nenjam mayanga vendum
Thoongum pothu vidiya vendum
Female : Manthirathil unnai mayanga vaithen
Manjal mugam konjam sivaka vaithaai
Sangamathil naan vizhunthuvitten
Enna sugam nee vazhangi vittai ahh
Maathulam
Male : Pazhathukku peyar maathulam
Female : Paruvathil varum maambazham
Male : Rasipavan peyar kadhalan
Female : Panthadum pazhathottam paavai meniyae
Both : Maathulam

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ………..

ஆண் : மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியோ
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியோ

பெண் : இளமை முழுதும் உனது வீடு
எடுத்து ரசித்து கவிதை பாடு
இளமை முழுதும் உனது வீடு
எடுத்து ரசித்து கவிதை பாடு
பாடும்போது ஆசை நூறு
போகப்போக இன்பம் வேறு

ஆண் : கன்னங்களில் மின்னும் திராட்சை பழம்
வண்ண இதழ் சிந்தும் கோவைப்பழம்
கண் இரண்டில் உள்ள ஆசைப்பழம்
காதல் பழம் அது மாதுளம் பழம்
பெண் : ஆஆ
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே…
மாதுளம்…

ஆண் : இரவில் நிலவு சிரிக்கும் போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
இரவில் நிலவு சிரிக்கும்போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
துடிக்கும் நெஞ்சம் மயங்க வேண்டும்
தூங்கும் போது விடிய வேண்டும்

பெண் : மந்திரத்தில் உன்னை மயங்க வைத்தேன்
மஞ்சள் முகம் கொஞ்சம் சிவக்க வைத்தாய்
சங்கமத்தில் நான் விழுந்துவிட்டேன்
என்ன சுகம் நீ வழங்கி விட்டாய் ஆஆ மாதுளம்

ஆண் : பழத்துக்கு பெயர் மாதுளம்
பெண் : பருவத்தில் வரும் மாம்பழம்
ஆண் : ரசிப்பவன் பெயர் காதலன்
பெண் : பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே
இருவர் : மாதுளம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here