Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : K.V. Mahadevan

Male : { Mayakamenna…
Indha mounam enna
Mani maaligai thaan kannae } (2)

Male : Thayakam enna
Indha salanam enna
Anbu kaanikai thaan kannae

Female : Karpanaiyil varum
Kadhaigalilae naan kettadhundu
Kanna en kaadhalukae varum
Kaanikai endrae ninaithadhillai kanna

Male : Ther polae oru
Pon oonjal adhil devadhai
Polae nee aada

Female : Poovaadai
Varum meniyilae un
Punnagai idhazhgal vilaiyaada

Male : Kaarkaalam yena
Virindha koondhal
Kannathin meedhae kolamida

Female : Kai valaiyum
Mai vizhiyum
Kattianaithu kavi paada

Male : Mayakamenna   Female : Mm hmm

Female : Aa haa

Male : Indha mounam enna

Female : Aa haa

Male : Mani maaligai thaan kannae

Female : ……………………….

Male : Paadi varum
Vanna neerodai unnai
Paatha poojai seithu vara

Female : Odi varum andha
Odaiyilae un ullamum
Sernthu midhandhu vara

Male : Malligai kaatru
Mellidai meedhu
Mandhiram potu thaalaata

Female : Valli malaithen
Alliyelundha vanna
Idhazhunnai neeraata

Male : Mayakamenna  Female : Aa haa

Male : Indha mounam enna

Female : Aa aaa

Male : Mani maaligai thaan kannae

Female : …………………………

Male : Annathai thotta
Kaigalinaal madhu
Kinnathai ini naan thoda maten

Female : Kannathil irukum
Kinnathai eduthu
Madhuvarundhaamal
Vida maten

Male : Unnaiyallaal oru
Pennai ini naan
Ullathinaalum thoda maten

Female : Un ullam
Irupadhu ennidamae
Adhai uyir ponaalum
Thara maten

Male : Mayakamenna   Female : Aa haa

Male : Indha mounam enna

Female : Aaaaa

Male : Mani maaligai thaan kannae

Female : Aaaaa

Male : Thayakam enna

Female : Aa haaha

Male : Indha salanam enna

Female : Aa haaha

Male : { Anbu kaanikai thaan kannae } (2)

Female : Aa haahaha aaa

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே } (2)

ஆண் : தயக்கமென்ன
இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை
தான் கண்ணே

பெண் : கற்பனையில்
வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு
கண்ணா என் காதலுக்கே
வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

ஆண் : தேர் போலே
ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே
நீ ஆட

பெண் : பூவாடை
வரும் மேனியிலே
உன் புன்னகை
இதழ்கள் விளையாட

ஆண் : கார்காலம் என
விரிந்த கூந்தல் கன்னத்தின்
மீதே கோலமிட

பெண் : கை வளையும்
மை விழியும் கட்டி
அணைத்து கவி பாட

ஆண் : மயக்கமென்ன
பெண் : ம்ம் ஹ்ம்ம் ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஹா
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே

பெண் : …………………

ஆண் : பாடி வரும்
வண்ண நீரோடை
உன்னை பாத பூஜை
செய்து வர

பெண் : ஓடி வரும்
அந்த ஓடையிலே
உன் உள்ளமும்
சேர்ந்து மிதந்து வர

ஆண் : மல்லிகை
காற்று மெல்லிடை
மீது மந்திரம் போட்டு
தாலாட்ட

பெண் : வள்ளி
மலைத்தேன்
அள்ளி எழுந்த
வண்ண இதழ்
உன்னை நீராட்ட

ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே

பெண் : ………………….

ஆண் : அன்னத்தை
தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி
நான் தொட மாட்டேன்

பெண் : கன்னத்தில்
இருக்கும் கிண்ணத்தை
எடுத்து மது அருந்தாமல்
விட மாட்டேன்

ஆண் : உன்னையல்லால்
ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட
மாட்டேன்

பெண் : உன் உள்ளம்
இருப்பது என்னிடமே
அதை உயிர் போனாலும்
தர மாட்டேன்

ஆண் : மயக்கமென்ன
பெண் : ஆஹா
ஆண் : இந்த மௌனம் என்ன
பெண் : ஆஆஆ
ஆண் : மணி மாளிகை
தான் கண்ணே
பெண் : ஆஆஆ
ஆண் : தயக்கமென்ன
பெண் : ஆஹாஹா
ஆண் : இந்த சலனமென்ன
பெண் : ஆஹாஹா
ஆண் : அன்பு காணிக்கை
தான் கண்ணே அன்பு
காணிக்கை தான் கண்ணே
பெண் : ஆஹாஹாஹாஆ


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here