Singer : P. Susheela

Music by : M. S. Sanjay

Lyrics by : Kannadasan

Female : Mayangugiraal intha madurai meenatchi
Maayavan annanai kaanavillai endru
Vaaraai kannaa en gogula mannaa en annaa

Female : Mayangugiraal intha madurai meenatchi
Maayavan annanai kaanavillai endru

Female : Manimaada thendral vaigaiyil vizhunthu
Malar polum kannil kanneer ezhunthu
Varunthum thunbam arivaayo
Udan piranthaalai maranthaayo

Female : Mayangugiraal intha madurai meenatchi
Maayavan annanai kaanavillai endru

Female : Oru thaayin pillai oru kodi mullai
Ondraagum andri irandaavathilai
Anbum paasamum poithaanaa
Annaa naan unnai marapenaa

Female : Mayangugiraal intha madurai meenatchi
Maayavan annanai kaanavillai endru

Female : Manamedai kandu maanikka meenaal
Manakkolam kolla nee illaiyaanaal
Manjal kungumam yaar tharuvaar
Kadamaiyai enni varuvaayo

Female : Mayangugiraal intha madurai meenatchi
Maayavan annanai kaanavillai endru
Mayangugiraal intha madurai meenatchi
Maayavan annanai kaanavillai endru

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை காணவில்லை என்று
வாராய் கண்ணா என் கோகுல மன்னா என் அண்ணா

பெண் : மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை காணவில்லை என்று

பெண் : மணிமாடத் தென்றல் வைகையில் விழுந்து
மலர் போலும் கண்ணில் கண்ணீர் எழுந்து…..
வருந்தும் துன்பம் அறிவாயோ
உடன் பிறந்தாளை மறந்தாயோ…..

பெண் : மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை காணவில்லை என்று

பெண் : ஒரு தாயின் பிள்ளை ஒரு கொடி முல்லை
ஒன்றாகும் அன்றி இரண்டாவதில்லை
அன்பும் பாசமும் பொய்தானா
அண்ணா நான் உன்னை மறப்பேனா

பெண் : மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை காணவில்லை என்று

பெண் : மணமேடை கண்டு மாணிக்க மீனாள்
மணக்கோலம் கொள்ள நீ இல்லையானால்
மஞ்சள் குங்குமம் யார் தருவார்
கடமையை எண்ணி வருவாயோ……

பெண் : மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை காணவில்லை என்று
மயங்குகிறாள் இந்த மதுரை மீனாட்சி
மாயவன் அண்ணனை காணவில்லை என்று…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here