Singers : Saindhavi, G. V. Prakash Kumar and P. Gopala Krishnan

Music by : Alex Premnath

Male : Mazhai varum neram
Unnai ninaithen
Mazhai nindra pothum
Mella nanaidhen

Female : Idhayaththin arai indru
Thirakkirathae
Un kaaladi suvadugal
Ketkkirathae

Male : Uyirukkul un kural
Olikkirathae
En nizhalukkum un mugam
Therigirathae

Female : Kaattru ulla kaalam
Adhuvaraikkum
Kaadhal indha mannil
Nilaithirukkum

Male : Mazhai varum neram
Unnai ninaithen
Mazhai nindra pothum
Mella nanaidhen

Male : Ninaivinil neethaan naalthorum
Varugiraai
Kanavilum pennae neengaamal
Thodargiraai…aaaii…

Female : Nerukkaththil ennai theemootta
Varugiraai
Irundhum yen konjam idaiveli nee
Vidugiraai

Male : Manasukkul thayakanggal
Irukkirathae..yeyi
Thayakkaththai mayakkanggal
Jeyikkirathae…ye

Female : Varthaiyil mounangal
Velgirathae
Mounamum kaadhalai
Solgirathae

Male & Female :
Vaanamulla kaalam
Adhuvaraikkum
Kaadhal indha mannil
Nilaithirukkum

Male : Mazhai varum neram
Unnai ninaithen

Female : ………………………..

Male : Oru murai ennai
Nee paarththaal kothikkuthae
Marumurai pennae
Nee paarththaal kuliruthae..hae..ae..

Female : Un madi saayum
Inneram pidikkuthae
Unnudan pogum
Paadhai thaan inikkudhae

Male : Thaaiyena vaazhkaiyil
Vandhu vittaai
En thanimaikku thanimaigal
Thanthu vittaai

Female : Udhiraththil muzhudhaai
Kalandhuvittaai
En penmaiyai poovaai
Malaravittaai

Male & Female :
Boomi ulla kaalam
Adhu varaikkum
Kaadhal indha mannil
Nilaithirukkum

Female : Mazhai varum neram
Male : Unnai ninaithen..aen
Female : Mazhai nindra pothum
Male : Mella nanaidhen…haenn..

பாடகர்கள் : சைந்தவி, ஜி. வி. பிரகாஷ், மற்றும் பி. கோபால கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத்

ஆண் : மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
மழை நின்ற போதும்
மெல்ல நனைந்தேன்

பெண் : இதயத்தின் அறை இன்று
திறக்கிறதே உன் காலடிச்சுவடுகள்
கேட்கிறதே

ஆண் : உயிருக்குள் உன் குரல்
ஒலிக்கிறதே
என் நிழல்லுக்கும் உன் முகம்
தெரிகிறதே

பெண் : காற்று உள்ள காலம்
அதுவரைக்கும் காதல் இந்த
மண்ணில் நிலைத்திருக்கும்

ஆண் : மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
மழை நின்ற போதும்
மெல்ல நனைந்தேன்…

ஆண் : நினைவினில் நீதான்
நாள்தோறும் வருகிறாய்….
கனவிலும் பெண்ணே
நீங்காமல் தொடர்கிறாய்…

பெண் : நெருக்கத்தில் என்னை
தீ மூட்ட வருகிறாய்
இருந்தும் ஏன் கொஞ்சம்
இடைவெளி நீ விடுகிறாய்….

ஆண் : மனசுக்குள் தயக்கங்கள்
இருக்கிறதே ஏய் ய்
தயக்கத்தை மயக்கங்கள்
ஜெய்க்கிறதே ஏ…

பெண் : வார்த்தையில் மௌனங்கள்
வெல்கிறதே
மௌனமும் காதலை
சொல்கிறதே

ஆண் மற்றும் பெண் :
வானமுள்ள காலம் அதுவரைக்கும்
காதல் இந்த மண்ணில்
நிலைத்திருக்கும்

ஆண் : மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்

பெண் : ……………….

ஆண் : ஒருமுறை என்னை நீ
பார்த்தால் கொதிக்குதே…
மறுமுறை பெண்ணே நீ
பார்த்தால் குளிருதே ஹே…

பெண் : உன் மடி சாயும்
இந்நேரம் பிடிக்குதே…
உன்னுடன் போகும்
பாதைதான் இனிக்குதே…..

ஆண் : தாயென வாழ்க்கையில்
வந்துவிட்டாய்
என் தனிமைக்கு தனிமைகள்
தந்துவிட்டாய்

பெண் : உதிரத்தில் முழுதாய்
கலந்துவிட்டாய்
என் பெண்மையை பூவாய்
மலரவிட்டாய்

ஆண் மற்றும் பெண் :
பூமியுள்ள காலம் அதுவரைக்கும்
காதல் இந்த மண்ணில்
நிலைத்திருக்கும்

பெண் : மழை வரும் நேரம்
ஆண் : உன்னை நினைத்தேன்
பெண் : மழை நின்ற போதும்
ஆண் : மெல்ல நனைந்தேன் ஹே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here