Singer : S. P. Balasubrahmanyam

Music by : Maragathamani

Male : Mazhaiyum neeyae veyilum neeyae
Nilavum neeyae neruppum neeyae
Adadaa unaithaan
Ingu vaazhum maanidar kaadhal enbadhaa

Male : Mazhaiyum neeyae veyilum neeyae
Nilavum neeyae neruppum neeyae
Adadaa unaithaan
Ingu vaazhum maanidar kaadhal enbadhaa

Male : Mazhaiyum neeyae…

Male : Idhu enna mannil kooda
Nilavum varumaa
Sarasam payilum vizhiyil varumae
Idhu enna thendral kooda
Analaai chudumaa
Thanimai ninaivil analaai chuduthae

Male : Paarkkaamal mella paarththaalae
Adhudhaanaa kaadhal kalai
Tholodu alli cherthaanae
Adhudhaanaa mona nilai
Idhu dhaan sorgamaa
Idhu kaamadhavaenin yaaga saalaiyaa

Male : Mazhaiyum neeyae veyilum neeyae
Nilavum neeyae neruppum neeyae
Adadaa unaithaan
Ingu vaazhum maanidar kaadhal enbadhaa

Male : Kalaiyellaam kattru kollum
Paruvam paruvam
Kadal neer alaipol idhayam alaiyum
Karu neela kangal rendum
Pavazham pavazham
Eriyum viragam adhilae theriyum

Male : Yegaandham indha aanandham
Adhan ellai yaararivaar
Yedhedho sugam podhaadho
Indha yekkam yaararivaar
Mudhalaai mudivaai
Ingu endrum vaazhvadhu
Kaadhal ondru dhaan

Male : Mazhaiyum neeyae veyilum neeyae
Nilavum neeyae neruppum neeyae
Adadaa unaithaan
Ingu vaazhum maanidar kaadhal enbadhaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மரகதமணி

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

ஆண் : மழையும் நீயே……..

ஆண் : இது என்ன மண்ணில் கூட
நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட
அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே

ஆண் : பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே
அதுதானா மோன நிலை
அடடா இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

ஆண் : கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்
பருவம் பருவம்
கடல் நீர் அலைபோல் இதயம் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும்
பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்

ஆண் : ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது
காதல் ஒன்றுதான்

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here