Singer : P. Susheela

Music by : Vishwanathan- Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Meettaadha veenai idhu veesi varum thendral
Vaadadha mullai idhu paadi varum thaeni
Meettaadha veenai idhu veesi varum thendral
Vaadadha mullai idhu paadi varum thaeni
Thevittadha inimai idhu thigattadha pudhumai
Palingaana padhumai idhu pazhagaadha ilamai
Thevittadha inimai idhu thigattadha pudhumai
Palingaana padhumai idhu pazhagaadha ilamai

Female : Meettaadha veenai idhu veesi varum thendral
Vaadadha mullai idhu paadi varum thaeni

Female : Aasiyudan odi varum azhagu mugam ondru
Anjiyae nadungi varum anbu mugam ondru
Paasamalar kondu varum paruva mugam ondru
Paarthavudan naanamena sivandha mugam ondru

Female : Meettaadha veenai idhu veesi varum thendral
Vaadadha mullai idhu paadi varum thaeni

Female : Mai vadiyum kann paarthu malar endru solvaar
Mayangi varum nadai paarthu annanadai enbaar
Kai yazhagu paarthavudan kavidhai mazhai pozhivaar
Kaalamagal pettradhoru kolamayil enbaar

Female : Meettaadha veenai idhu veesi varum thendral
Vaadadha mullai idhu paadi varum thaeni
Hmm mm mm hmm mm ….

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்
வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்
வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ

பெண் : தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை
பளிங்கான பதுமை இது பழகாத இளமை
தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை
பளிங்கான பதுமை இது பழகாத இளமை

பெண் : மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்
வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ

பெண் : ஆசையுடன் ஓடிவரும் அழகு முகம் ஒன்று
அஞ்சியே நடுங்கி வரும் அன்பு முகம் ஒன்று
பாசமலர் கொண்டு வரும் பருவமுகம் ஒன்று
பார்த்தவுடன் நாணமெனச் சிவந்த முகம் ஒன்று

பெண் : மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்
வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ

பெண் : மை வடியும் கண் பார்த்து மலரென்று சொல்வார்
மயங்கி வரும் நடை பார்த்து அன்னநடை என்பார்
கையழகு பார்த்தவுடன் கவிதை மழை பொழிவார்
காலமகள் பெற்றதொரு கோலமயில் என்பார்

பெண் : மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்
வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here