Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Megam vanthathu minnal vandhadhu
Mazhai pozhiyavillai
Megam vanthathu minnal vandhadhu
Mazhai pozhiyavillai
Veedu thedi deepam vandhadhu
Oli pirakkavillai
Megam vanthathu minnal vandhadhu
Mazhai pozhiyavillai
Veedu thedi deepam vandhadhu
Oli pirakkavillai

Female : Kaatru vandhadhu malar asainthathu
Manam asaiyavillai
Kaatru vandhadhu malar asainthathu
Manam asaiyavillai
Kannurangidum iravinilum
Pennurangavillai
Megam vanthathu minnal vandhadhu
Mazhai pozhiyavillai

Female : Paal palangal thevai endraal
Veliyil sollalaam
Vannapattu saelai nagaigal
Kettu vaangi kollalaam

Female : Kaadhalindru thevai endru
Ketka mudiyuma
Kaadhalindru thevai endru
Ketka mudiyuma
Indha kavalai thannai pirarkku
Solli theerkka mudiyuma

Female : Megam vanthathu minnal vandhadhu
Mazhai pozhiyavillai
Veedu thedi deepam vandhadhu
Oli pirakkavillai
Megam vanthathu minnal vandhadhu
Mazhai pozhiyavillai

Female : Nenjirukkum ninaivirukkum
Vaarthai illaiyae
Indha nilamai solla ulagil
Endha mozhiyum illaiyae

Female : Thanjam endru vandha pinnum
Karunai illaiyae
Thanjam endru vandha pinnum
Karunai illaiyae
Edhai tharuvadhendrum peruvadhendrum
Puriyavillaiyae

Female : Megam vanthathu minnal vandhadhu
Mazhai pozhiyavillai
Veedu thedi deepam vandhadhu
Oli pirakkavillai
Megam vanthathu minnal vandhadhu
Mazhai pozhiyavillai

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மேகம் வந்தது மின்னல் வந்தது
மழை பொழியவில்லை
மேகம் வந்தது மின்னல் வந்தது
மழை பொழியவில்லை
வீடு தேடி தீபம் வந்தது
ஒளி பிறக்கவில்லை
மேகம் வந்தது மின்னல் வந்தது
மழை பொழியவில்லை
வீடு தேடி தீபம் வந்தது
ஒளி பிறக்கவில்லை

பெண் : காற்று வந்தது மலர் அசைந்தது
மனம் அசையவில்லை
காற்று வந்தது மலர் அசைந்தது
மனம் அசையவில்லை
கண்ணுறங்கிடும் இரவினிலும்
பெண்ணுறங்கவில்லை
மேகம் வந்தது மின்னல் வந்தது
மழை பொழியவில்லை

பெண் : பால் பழங்கள் தேவையென்றால்
வெளியில் சொல்லலாம்
வண்ணப் பட்டுச் சேலை நகைகள்
கேட்டு வாங்கிக் கொள்ளலாம்

பெண் : காதலின்று தேவையென்று
கேட்க முடியுமா
காதலின்று தேவையென்று
கேட்க முடியுமா
இந்தக் கவலை தன்னைப் பிறர்க்குச்
சொல்லித் தீர்க்க முடியுமா

பெண் : மேகம் வந்தது மின்னல் வந்தது
மழை பொழியவில்லை
வீடு தேடி தீபம் வந்தது
ஒளி பிறக்கவில்லை
மேகம் வந்தது மின்னல் வந்தது
மழை பொழியவில்லை

பெண் : நெஞ்சிருக்கும் நினைவிருக்கும்
வார்த்தை இல்லையே
இந்த நிலைமை சொல்ல உலகில்
எந்த மொழியுமில்லையே

பெண் : தஞ்சமென்று வந்த பின்னும்
கருணை இல்லையே
தஞ்சமென்று வந்த பின்னும்
கருணை இல்லையே
எதைத் தருவதென்றும் பெறுவதென்றும்
புரியவில்லையே………

பெண் : மேகம் வந்தது மின்னல் வந்தது
மழை பொழியவில்லை
வீடு தேடி தீபம் வந்தது
ஒளி பிறக்கவில்லை
மேகம் வந்தது மின்னல் வந்தது
மழை பொழியவில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here