Singer : Vani Jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamaipithan

Female : Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu

Female : Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu

Female : Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan

Female : Pournami nilavil pavala malligai
Malarvathai polae naan malarnthaen
Maargazhi paniyil unathu ninaivaal
Kannurangaamal kaaththirunthaen

Female : Vaasalil kolam pottu vaithaen
Un varugaikku dheepam yaettri vaithaen
Nee ketta pinnum paadaamal ponaal
En paadal yaar ketpathu…

Female : Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan

Female : Ovvoru iravum paruva veenaiyai
Meettidaththaanae pirakkirathu
Ovvoru idamum enathu maeniyil
Unakkenaththaanae thudikkirathu….

Female : Maamazhai saaral oraththilae
Unnai mani vizhi thedum mogaththilae
Nee ketta pinnum paadamal ponaal
En paadal yaar ketpathu….

Female : Megangalae mazhaikkagaththaan
En raagangalae unakagaththan
Mmmmmm…..unakagaththan
Mmmmmm…..unakagaththan

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது……

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது……

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்

பெண் : பௌர்ணமி நிலவில் பவள மல்லிகை
மலர்வதை போலே நான் மலர்ந்தேன்
மார்கழி பனியில் உனது நினைவால்
கண்ணுறங்காமல் காத்திருந்தேன்

பெண் : வாசலில் கோலம் போட்டு வைத்தேன்
உன் வருகைக்கு தீபம் ஏற்றி வைத்தேன்
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது……

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்

பெண் : ஒவ்வொரு இரவும் பருவ வீணையை
மீட்டிடத்தானே பிறக்கிறது
ஒவ்வொரு இடமும் எனது மேனியில்
உனக்கெனத்தானே துடிக்கிறது

பெண் : மாமலை சாரல் ஓரத்திலே
உன்னை மணி விழி தேடும் மோகத்திலே
நீ கேட்ட பின்னும் பாடாமல் போனால்
என் பாடல் யார் கேட்பது…..

பெண் : மேகங்களே மழைக்காகத்தான்
என் ராகங்களே உனக்காகத்தான்
ம்ம்ம்ம்….உனக்காகத்தான்
ம்ம்ம்ம்…..உனக்காகத்தான்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here