Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Mella.. mella mella
Endhan maeni nadunguthu mella
Male : Solla…solla solla
Nenjam thulludhu thulludhu solla

Female : Mella..mella mella
Endhan maeni nadunguthu mella
Male : Solla…solla solla
Nenjam thulludhu thulludhu solla

Female : Uchi mudhar kondu paadham varai
Indru minnalai enna solla
Uchi mudhar kondu paadham varai
Indru minnalai enna solla
Male : Micham iruppadhai naalai endru
Micham iruppadhai naalai endru
Nenjil minnidum aasaiyai enna solla
Female : Mella…mella mella

Male : Athipazhathirkku mael azhagu
Undhan aasai pazhathirkku ullazhagu
Athipazhathirkku mael azhagu
Undhan aasai pazhathirkku ullazhagu
Female : Thathi thavikindra ponnazhagu
Thathi thavikindra ponnazhagu
Unnai thazhuva thudikkindra pennazhagu

Female : Mella… mella mella
Endhan maeni nadunguthu mella
Male : Solla…solla solla
Nenjam thulludhu thulludhu solla

Female : Thaamarai poovinil vandu vandhu
Thaen arundha malar moodi kolla
Thaamarai poovinil vandu vandhu
Thaen arundha malar moodi kolla
Ullirundhae vandu aadudhal pol
Ullirundhae vandu aadudhal pol
Ullathil nee nindru aadugindraai
Aadugindraai ..aadugindraai… mella

Male : Melai dhisaiyinil poi urangum
Kadhir meendum varum varai mann ulagam
Melai dhisaiyinil poi urangum
Kadhir meendum varum varai mann ulagam
Kaalai poludhinil sindhanaigal
Kaalai poludhinil sindhanaigal
Maru maalai varum varai karpanaigal
Female : Mella
Male : Solla solla

Female : Ondrilirundhu ondru varum
Andha ondrukkul ondru urangi vidum
Ondrilirundhu ondru varum
Andha ondrukkul ondru urangi vidum
Male : Ondru pirindha pin ondrum illai
Ondru pirindha pin ondrum illai
Naam ondru irandenbadhu endrum illai

Female : Mella.. mella mella
Endhan maeni nadunguthu mella
Male : Solla.. solla solla
Nenjam thulludhu thulludhu solla

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
ஆண் : சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல..

பெண் : மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
ஆண் : சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல..

பெண் : உச்சி முதல் கொண்டு பாதம் வரை
இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல
உச்சி முதல் கொண்டு பாதம் வரை
இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல
ஆண் : மிச்சம் இருப்பதை நாளை என்று
மிச்சம் இருப்பதை நாளை என்று
நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன சொல்ல
பெண் : மெல்ல மெல்ல மெல்ல…

ஆண் : அத்திப்பழத்திற்கு மேல் அழகு
உந்தன் ஆசை பழத்திற்கு உள்ளழகு
அத்திப்பழத்திற்கு மேல் அழகு
உந்தன் ஆசை பழத்திற்கு உள்ளழகு
பெண் : தத்தி தவிக்கின்ற பொன்னழகு
தத்தி தவிக்கின்ற பொன்னழகு
உன்னை தழுவ துடிக்கின்ற பெண்ணழகு

பெண் : மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
ஆண் : சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல

பெண் : தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள
தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளத்தில் நீ நின்று ஆடுகின்றாய்
ஆடுகின்றாய்………ஆடுகின்றாய்..மெல்ல

ஆண் : மேலை திசையினில் போய் உறங்கும்
கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்
மேலை திசையினில் போய் உறங்கும்
கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்
காலை பொழுதினில் சிந்தனைகள்
காலை பொழுதினில் சிந்தனைகள்
மறு மாலை வரும் வரை கற்பனைகள்
பெண் : மெல்ல ஆண் : சொல்ல சொல்ல

பெண் : ஒன்றிலிருந்தே ஒன்று வரும்
அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கி விடும்
ஒன்றிலிருந்தே ஒன்று வரும்
அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கி விடும்
ஆண் : ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
ஒன்று பிரிந்த பின் ஒன்றுமில்லை
நாம் ஒன்று இரண்டென்பது என்றுமில்லை

பெண் : மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
ஆண் : சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here