Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Yugabharathi

Male : Mella sirithaal kadhalthaan
Minnal adiththaal kadhalthaan
Kann imaiththaal kadhalthaan
Kai asaithaal kadhalthaan
Thulli kuththithaal kadhalthaan
Thottu anaithaal kadhalthaan
Muththam kodththaal kadhalthaan
Moochai pariththaal kadhalthaan

Male : Aadhalaal aadhalaal
Kadhal seiveer kadhal seiveer
Aadhalaal aadhalaal
Kadhal seiveer kadhal seiveer

Male : Kadhalithupaar kaalam vendridum
Theruvilakkengum nila thenpadum
Kadhalithupaar paadaputhagam
Kavithai thoguppaagum

Male : Kadhalithupaar vervai minnidum
Irumiya satham isai aagidum
Kadhalithupaar bhoomi mothamum
Pudhithaai urumaarum

Male : Kadhalithupaar unmaiyil
Kaithu seiyyalaam kaattraiyum
Kadhalithupaar nanbanae
Vaazhathondrumae naalaiyum
Devathaigalin aasithaanae
Kaadhalendru koorugindraen

Male : Aadhalaal aadhalaal
Kadhal seiveer kadhal seiveer
Aadhalaal aadhalaal
Kadhal seiveer kadhal seiveer

Male : Kadhalipathaal vaanavillinai nee
Kudaikalukullae naalum vaikkalaam
Kadhalipathaal moolai engilum
Kudaiyum santhosham

Male : Kadhalippathaal veettu thinnaiyum
Arasavai kattil pola maaridum
Kadhalippathaal thega selgalil
Paravum minsaaram

Male : Kadhalippathaal gangaiyum
Vanthu serumae koppaiyil
Kadhalippathaal punnagai
Neelamaagumae vaazhgaiyil
Saalai karkalum
Saamiyaaga maaralaamae kadhal seithaal

Male : Aadhalaal aadhalaal
Kadhal seiveer kadhal seiveer
Aadhalaal aadhalaal
Kadhal seiveer kadhal seiveer

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : யுகபாரதி

ஆண் : மெல்ல சிரித்தால் காதல்தான்
மின்னல் அடித்தால் காதல்தான்
கண் இமைத்தால் காதல் தான்
கை அசைத்தால் காதல்தான்
துள்ளி குதித்தால் காதல்தான்
தொட்டு அனைத்தால் காதல்தான்
முத்தம் கொடுத்தால் காதல்தான்
மூச்சைப் பறித்தால் காதல்தான்

ஆண் : ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்

ஆண் : காதலித்துப்பார் காலம் வென்றிடும்
தெருவிளக்கெங்கும் நிலா தென்படும்
காதலித்துப்பார் பாடப்புத்தகம்
கவிதைத்தொகுப்பாகும்

ஆண் : காதலித்துப்பார் வேர்வை மின்னிடும்
இருமிய சத்தம் இசை ஆகிடும்
காதலித்துப்பார் பூமி மொத்தமும்
புதிதாய் உருமாறும்

ஆண் : காதலித்துப்பார் உண்மையில்
கைது செய்யலாம் காற்றையும்
காதலித்துப்பார் நண்பனே
வாழத்தோன்றுமே நாளையும்
தேவதைகளின் ஆசிதானே
காதலென்று கூறுகின்றேன்

ஆண் : ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்

ஆண் : காதலிப்பதால் வானவில்லினை நீ
குடைகளுக்குள்ளே நாளும் வைக்கலாம்
காதலிப்பதால் மூளை எங்கிலும்
குடையும் சந்தோஷம்

ஆண் : காதலிப்பதால் வீட்டுத் திண்ணையும்
அரசவைக் கட்டில் போல மாறிடும்
காதலிப்பதால் தேகச் செல்களில்
பரவும் மின்சாரம்

ஆண் : காதலிப்பதால் கங்கையும்
வந்து சேருமே கோப்பையில்
காதலிப்பதால் புன்னகை
நீளமாகுமே வாழ்க்கையில்
சாலைக்கற்களும்
சாமியாக மாறலாமே காதல் செய்தால்

ஆண் : ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்
ஆதலால் ஆதலால்
காதல் செய்வீர் காதல் செய்வீர்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here