Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Mella varum kaatru
Solli tharum paattu
Kannendra mozhi paarthu
Pennendra sruthi saerthu

Male : Mella varum kaatru
Solli tharum paattu
Kannendra mozhi paarthu
Pennendra sruthi saerthu

Female : Aanippon maeniyai
Aasaiyil anaithida
Kaanikkai koduththadhum
Naetrallavo
Panimalar azhaginil
Mayangida aruginil
Vanthaal indrae vaa………

Male : Mella varum kaatru
Solli tharum paattu
Kannendra mozhi paarthu
Pennendra sruthi saerthu

Male : Thalaivan thalaivi vizhiyaal
Mozhinthaal kaadhal
Thaniyae pirinthae
Thazhuvaadhirunthaal oodal
Female : Avanum avalum silaiyaai
Irunthaal koyil
Idhayam muzhudhum
Anbaai irunthaal kaadhal

Male : Kaadhalan pesida
Maadhulampoovinil
Thaen thuli
Koduthadhum neeyallavo
Female : Unakkulla mayakkathil
Enakkulla baakiyai
Thanthaal indrae thaa….aaa

Female : Mella varum kaatru
Solli tharum paattu
Kannendra mozhi paarthu
Pennendra sruthi saerthu

Male : Malarnthaal kaninthaal
Madi mael vizhunthaal paavai

Female : Medhuvaai padarum kodi pol
Valainthaal thogai

Male : Yaarumillaadhoru
Naerathilae unnai
Vaavena azhaithadhum
Naanallavo
Female : Naalenna pozhudhenna
Aaramba paadathai
Sonnaal indrae sol…

Male : Mella varum kaatru
Female : Solli tharum paattu
Male : Kannendra mozhi paarthu
Female : Pennendra sruthi saerthu

Both : Lalala lalala lala laa laa
Lalala lalala lala laa laa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

ஆண் : மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

பெண் : ஆனிப்பொன் மேனியை
ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும்
நேற்றல்லவோ
பனிமலர் அழகினில்
மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா…..

பெண் : மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

ஆண் : தலைவன் தலைவி விழியால்
மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே
தழுவாதிருந்தால் ஊடல்
பெண் : அவனும் அவளும் சிலையாய்
இருந்தால் கோவில்
இதயம் முழுதும்
அன்பாய் இருந்தால் காதல்

ஆண் : காதலன் பேசிட
மாதுளம்பூவினில்
தேன் துளி
கொடுத்ததும் நீயல்லவோ
பெண் : உனக்குள்ள மயக்கத்தில்
எனக்குள்ள பாக்கியை
தந்தால் இன்றே தா…..ஆஆ…..

பெண் : மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுருதி சேர்த்து

ஆண் : மலர்ந்தாள் கனிந்தாள்
மடிமேல் விழுந்தாள் பாவை

பெண் : மெதுவாய் படரும் கொடிபோல்
வளைந்தாள் தோகை

ஆண் : யாருமில்லாதொரு
நேரத்திலே உன்னை
வாவென அழைத்ததும்
நானல்லவோ
பெண் : நாளென்ன பொழுதென்ன
ஆரம்பப் பாடத்தை
சொன்னால் இன்றே சொல்

ஆண் : மெல்ல வரும் காற்று
பெண் : சொல்லித் தரும் பாட்டு
ஆண் : கண்ணென்ற மொழி பார்த்து
பெண் : பெண்ணென்ற சுருதி சேர்த்து

இருவர் : லலல லலல லல லா லா
லலல லலல லல லா லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here