Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Mogam pirandhadhammaa
Mundhaa naal paarkkaiyilae…

Male : Naesam pirandhadhammaa
Naetru nee nadakkaiyilae

Male : Yaekkam pirandhadhammaa
Indru nee sirikkaiyilae… ae…
Inbam pirakkumammaa
Naalai indha vaelaiyilae

Male : Oru naal koothukku
Meesaiyai vachaan medaiyilae
Maru naal paarkkaiyil
Maari irundhaan jaadaiyilae

Male : Oru naal koothukku
Meesaiyai vachaan medaiyilae
Maru naal paarkkaiyil
Maari irundhaan jaadaiyilae
Aahaa… marunaal paarkkaiyil
Maari irundhaan jaadaiyilae

Male : Kundu vizhi mandu mozhi sindu mudi
Nandu nadai pottaan paarammaa
Kattu vizhi muthu mozhi
Sithirathil utharavai kaetten paarammaa

Male : Oru naal koothukku
Meesaiyai vachaan medaiyilae
Maru naal paarkkaiyil
Maari irundhaan jaadaiyilae

Chorus : Laalaa… lalalala laa…
Laalaa… lalalala laa…
Laalaa… lalalala laa…
Laalaa… lalalala laa…

Male : Raaniyammaa aasaippatta
Aada solli aanaiyittaa
Maru pechenna moochenna
Vandhenae endraan
Avan yaarendu per solli
Nenjodu nindraan
Avan yaarendu per solli nenjodu nindraan

Male : Buthisaali mathiyilae
Kathu vecha vithaigalai
Padichaan paarammaa
Pombalaiya sokka vachi
Pakkam vandhu nikka vachu
Sirichaan paarammaa

Male : Oru naal koothukku
Meesaiyai vachaan medaiyilae
Maru naal paarkkaiyil
Maari irundhaan jaadaiyilae

Male : Paattukkellaam thalai asaichaan
Paakiravan adhisaiyichaan
Avan aattathil mogathai undaakki vechaan
Indha koottathil nottathai
Un mela vachaan
Indha koottathil nottathai
Un mela vachaan

Male : Punnagaiyum ponnagaiyum
Minna varum annamadhai
Usuraa nenaichaanae
Solliyadhai sonna padi
Enniyadhai enna padi
Nenaichaa mudippaarae

Chorus : Laalaa… lalalala laa…
Laalaa… lalalala laa…

Male : Puli vaesham pottavan thaan
Poonaiyai pol maari vandhaan
Eli vaettaikku naal vaithu
Poraada vandhaan
Veli vaeshathai mosathai
Poiyaakka vandhaan
Veli vaeshathai mosathai
Poiyaakka vandhaan

Male : Kambu sandai vambu sandai
Katti sandai kuthu sandai pottaan
Thaniyaaga
Pathu peru mathiyilae
Oththanaaga suthi vandhu
Jeyichaan mudivaaga

Male : Oru naal koothukku
Meesaiyai vachaan medaiyilae
Maru naal paarkkaiyil
Maari irundhaan jaadaiyilae
Aahaa… maru naal paarkkaiyil
Maari irundhaan jaadaiyilae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : மோகம் பிறந்ததம்மா
முந்தா நாள் பார்க்கையிலே…..

ஆண் : நேசம் பிறந்ததம்மா
நேத்து நீ நடக்கையிலே

ஆண் : ஏக்கம் பிறந்ததம்மா
இன்று நீ சிரிக்கையிலே……ஏ……
இன்பம் பிறக்குமம்மா
நாளை இந்த வேளையிலே

ஆண் : ஒரு நாள் கூத்துக்கு
மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில்
மாறி இருந்தான் ஜாடையிலே

ஆண் : ஒரு நாள் கூத்துக்கு
மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில்
மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா…….மறுநாள் பார்க்கையில்
மாறி இருந்தான் ஜாடையிலே

ஆண் : குண்டு விழி மண்டு மொழி சிண்டு முடி
நண்டு நடை போட்டான் பாரம்மா
கட்டு விழி முத்து மொழி
சித்திரத்தில் உத்தரவை கேட்டான் பாரம்மா

ஆண் : ஒரு நாள் கூத்துக்கு
மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில்
மாறி இருந்தான் ஜாடையிலே

குழு : லாலா…..லலலல லா…..
லாலா…..லலலல லா…..
லாலா…..லலலல லா…..
லாலா…..லலலல லா…..

ஆண் : ராணியம்மா ஆசைப்பட்டா
ஆடச்சொல்லி ஆணையிட்டா
மறுப்பேச்சென்ன மூச்சென்ன
வந்தேனே என்றான்
அவன் யாரென்று பேர் சொல்லி
நெஞ்சோடு நின்றான்
அவன் யாரென்று பேர் சொல்லி
நெஞ்சோடு நின்றான்

ஆண் : புத்திசாலி மத்தியிலே
கத்துவெச்ச வித்தைகளை
படிச்சான் பாரம்மா
பொம்பளைய தோற்க வெச்சு
பக்கம் வந்து நிக்கவெச்சு
சிரிச்சான் பாரம்மா

ஆண் : ஒரு நாள் கூத்துக்கு
மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில்
மாறி இருந்தான் ஜாடையிலே

ஆண் : பாட்டுக்கெல்லாம் தலை
அசைச்சான்
பாக்குறவன் அதிசயிச்சான்
அவன் ஆட்டத்தில் மோகத்தை
உண்டாக்கி வெச்சான்
இந்த கூட்டத்தில் நோட்டத்தை
உன் மேல வெச்சான்
இந்த கூட்டத்தில் நோட்டத்தை
உன் மேல வெச்சான்

ஆண் : புன்னகையும் பொன்னகையும்
மின்னலொரு அன்னமதை
உசுரா நெனச்சானே
சொல்லியதை சொன்னபடி
எண்ணியதை எண்ணப்படி
நெனச்சா முடிப்பானே

குழு : லாலா…..லலலல லா…..
லாலா…..லலலல லா…..

ஆண் : புலி வேஷம் போட்டவன்தான்
பூனையை போல் மாறி வந்தான்
எலி வேட்டைக்கு நாள் வைத்து
போராட வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை
பொய்யாக்க வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை
பொய்யாக்க வந்தான்

ஆண் : கம்பு சண்டை வம்பு சண்டை
கத்தி சண்டை குத்து சண்டை போட்டான்
தனியாக
பத்து பேரு மத்தியிலே
ஒருத்தனாக சுத்திவந்து
ஜெயிச்சான் முடிவாக

ஆண் : ஒரு நாள் கூத்துக்கு
மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில்
மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா…….மறுநாள் பார்க்கையில்
மாறி இருந்தான் ஜாடையிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here