Singers : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Male : Moongil kaattoram….mmm…mm
Kuzhalin naadham naan ketkiraen
Mugilin oorgolam…mmm..
Vaanil niththam naan paarkkiraen

Male : Kuyilae en kaadhodu nee paada vaa
Malarae un idhazh kondu nee pesa vaa

Male : Moongil kaattoram….mmm…mm
Kuzhalin naadham naan ketkiraen

Male : Alaigalin naattiyam
Karai meedhuthaan aaha haahaa
Ilaigalin naattiyam kilai meethuthaan
Ivaigalum aada…..aaa….aa…
Iyarkkaiyum paada…..aa…..aa…
Iraivaa un karpanai….ee….
Viyakkum en sinthanai

Male : Paasaththai vaiththaal
Pazhangathai sollum sarugugalae
Paravaiyai paarththaal
Manathinil mulaikkuthu siragugalae

Male : Moongil kaattoram….mmm…mm
Kuzhalin naadham naan ketkiraen

Male : Megamenum penn oruththi
Mogam konda nearaththilae
Kaattrennum kaalai vaanthaan thedi
Kalyaanam nadanthathadi koodi

Male : Malaiyo petra pillai…ee…
adhilae pala kavithai
Hae malaigalin maelae aruvi vizha aahaahaa
Maththalam polae oliyum ezha
Jadhiyil pirakka….aa….
Nadhi athai rasikka….aa….

Male : Salangai pol nelmani
kulungum vayal pennmani
Pulveli maelae paniththuli minnum vairam
Kadhiravan vanthu kalavaadi sellum jaalam

Male : Moongil kaattoram….mmm…mm
Kuzhalin naadham naan ketkiraen
Mugilin oorgolam…mmm..
Vaanil niththam naan paarkkiraen

Male : laalaalaalaalaa lalalalalala
Laalaalaalaalaalaalaalaa…..

Whistle : ……………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்…
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்……ம்ம்ம்…..
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்

ஆண் : குயிலே என் காதோடு நீ பாட வா
மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா

ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்…
குழலின் நாதம் நான் கேட்கிறேன்

ஆண் : அலைகளின் நாட்டியம்
கரை மீதுதான் ஆஹா ஹாஹா
இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்
இவைகளும் ஆட……ஆஆ…..ஆ…..
இயற்கையும் பாட……ஆஆ…..ஆ…..
இறைவா உன் கற்பனை…ஈ…..
வியக்கும் என் சிந்தனை

ஆண் : பாதத்தை வைத்தால்
பழங்கதை சொல்லும் சருகுகளே
பறவையைப் பார்த்தால்
மனதினில் முளைக்குது சிறகுகளே

ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்…
குழலின் நாதம் நான் கேட்கிறேன்

ஆண் : மேகமெனும் பெண்ணொருத்தி
மோகம் கொண்ட நேரத்திலே
காற்றென்னும் காளை வந்தான் தேடி
கல்யாணம் நடந்ததடி கூடி

ஆண் : மழையோ பெற்ற பிள்ளை…..ஈஈ….
அதிலே பல கவிதை
ஹே மலைகளின் மேலே அருவி விழ ஆஹாஹா
மத்தளம் போலே ஒலியும் எழ
ஜதியதில் பிறக்க…….ஆ…..
நதி அதை ரசிக்க…..ஆ…..

ஆண் : சலங்கை போல் நெல்மணி…..
குலுங்கும் வயல் பெண்மணி
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்

ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்…..
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்…..ம்ம்ம்…….
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்

ஆண் : லாலாலாலாலா லலலலலல
லாலாலாலாலாலாலா…..

விசில் : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here