Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Viswanathan – Ramamoorthy

Female : Mm mm mmm….mm mm mmm…..
Mm mm mmm….mm mm mmm…..

Male : Mounam enbathu kavithai mozhi
Intha maanguyil pesidum kangal vazhi
Mounam enpathu kavithai mozhi
Intha maanguyil pesidum kangal vazhi
Maanguyil pesidum kangal vazhi……aa….aa….

Male : Vaarththai illaatha paadal idhu anbai
Vaarththidum unmai kadhal idhu
Vaarththai illaatha paadal idhu anbai
Vaarththidum unmai kadhal idhu

Male : Kannae Un kann malarnthaal
Kaadellaam poochoriyum
Anbae nee kai anaiththaal
Anganagae paal vadiyum….

Female : Mayangi mayangi thayangi thayangi
Tholil thogai saayumpothu
Male : Thirumba thirumba virunthu padaikkum naalail
Urakkam ingu yaedhu

Female : Magaraajan kaiyaal naanum
Manamaalai vaangi kondaen
Male : Ilamaanai maarbil naanum
Idhamaaga thaangi kondaen

Female : Viral naagam varudida
Urugidum velai naanae
Male : Kacheri velai idhu
Kai kondu meettidavo
Kalyaana keerththangal
Ovvondraai kaattidavo

Female : Mounam enbathu kavithai mozhi
Intha maanguyil pesidum kangal vazhi
Maanguyil pesidum kangal vazhi…..ee….ee….ee…

Male : Unathu peyarai enathu udhadu
Naalum vedham pola odhum
Female : Udalum manamum uravu nadhiyin melae
Odam pola aadum

Male : Nijam intha paasam pandham
Niram maarum pookkal alla
Female : Unakkaaga mannil vanthaen
Unai vittu engae sella

Male : Piravigal pala varum
Pirivugal vaaraathammaa
Female : En jeevan mannavanae
Un vaasal thedi varum
Ennaalum un nizhalaai
Pinnodu odi varum

Male : Mounam enbathu kavithai mozhi
Intha maanguyil pesidum kangal vazhi
Maanguyil pesidum kangal vazhi……aa….aa….

Both : Mm mm mmm….mm mm mmm…..
Mm mm mmm….mm mm mmm…..

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

பெண் : ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..

ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி……ஆஆ…..ஆ..

ஆண் : வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை
வார்த்திடும் உண்மை காதல் இது
வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை
வார்த்திடும் உண்மை காதல் இது

ஆண் : கண்ணே உன் கண் மலரந்தால்
காடெல்லாம் பூச்சொரியும்
அன்பே நீ கை அணைத்தால்
அங்கங்கே பால் வடியும்….

பெண் : மயங்கி மயங்கி தயங்கி தயங்கி
தோளில் தோகை சாயும்போது
ஆண் : திரும்ப திரும்ப விருந்து படைக்கும் நாளில்
உறக்கம் இங்கு ஏது

பெண் : மகராஜன் கையால் நானும்
மணமாலை வாங்கிக் கொண்டேன்
ஆண் : இளமானை மார்பில் நானும்
இதமாக தாங்கிக் கொண்டேன்

பெண் : விரல் நாகம் வருடிட
உருகிடும் வேளை நானே
ஆண் : கச்சேரி வேளை இது
கை கொண்டு மீட்டிடவோ
கல்யாண கீர்த்தனங்கள்
ஒவ்வொன்றாய் காட்டிடவோ

பெண் : மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி…..ஈ…..ஈ……ஈ…..

ஆண் : உனது பெயரை எனது உதடு
நாளும் வேதம் போல ஓதும்
பெண் : உடலும் மனமும் உறவு நதியின் மேலே
ஓடம் போல ஆடும்

ஆண் : நிஜம் இந்த பாசம் பந்தம்
நிறம் மாறும் பூக்கள் அல்ல
பெண் : உனக்காக மண்ணில் வந்தேன்
உனை விட்டு எங்கே செல்ல

ஆண் : பிறவிகள் பல வரும்
பிரிவுகள் வாராதம்மா
பெண் : என் ஜீவன் மன்னவனே
உன் வாசல் தேடி வரும்
எந்நாளும் உன் நிழலாய்
பின்னோடு ஓடி வரும்

ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி….ஆ….ஆ….ஆ….

இருவர் : ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here