Singer : Vani Jayram
Music by : K. V. Mahadevan
Female : Mounam kalaiyaatho swami
Mounam kalaiyaatho swami
Idhu mazhaiyai edhirpaarththu
Mayanum udal verththu
Thanalaai kodhikkindra bhoomi….ee….
Female : Mounam kalaiyaatho swami
Idhu mazhaiyai edhirpaarththu
Mayanum udal verththu
Thanalaai kodhikkindra bhoomi….ee….
Female : Mounam kalaiyaatho swami
Female : Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada
Ilavenir nilavaadavae
Kani thaangum kodiyaada pani thoongum malaraada
Kalai maanum inaiyaadavae
Female : Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada
Ilavenir nilavaadavae
Kani thaangum kodiyaada pani thoongum malaraada
Kalai maanum inaiyaadavae
Female : Nizhal meamum koondhalil aadi vara
Manimegalai noolidai moodi vara
Intha menagai maeniyum kodi pera
Nava maamuni sannathi thedi vara
Thiruvaai malarnthida vendum….mmmm….
Female : Mounam kalaiyaatho swami
Idhu mazhaiyai edhirpaarththu
Mayanum udal verththu
Thanalaai kodhikkindra bhoomi….ee….
Female : Vasantha kaalanal idhu pol
Vaasal thedi varumo
Nenjil vilaintha nyanagal
Enai pol rajaboam tharumo
Female : Ezhunthu varungal sugangal melum melum malara
Kannai thiranthu paarungal edhiril devadevi ulava
Female : Kallum kaniyaaggum mullum malaraagum
Kanni mayilaadum velaiyil ullam urugaatho
Vellam pergaatho otti uravaadum leelaiyil
Female : Thavaththai kalaikka vantha devathai
Thazhuvi pozhiya vantha thaen mazhai
Ulagai mayakkum vannappoonaai
Udhattil eduththu vantha menagai….menagai….menagai…..
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : மௌனம் கலையாதோ சுவாமி
மௌனம் கலையாதோ சுவாமி
இது மழையை எதிர்ப்பார்த்து
மயங்கும் உடல் வேர்த்து
தணலாய் கொதிக்கின்ற பூமி……ஈ…..
பெண் : மௌனம் கலையாதோ சுவாமி
இது மழையை எதிர்ப்பார்த்து
மயங்கும் உடல் வேர்த்து
தணலாய் கொதிக்கின்ற பூமி….ஈ…….
பெண் : மௌனம் கலையாதோ சுவாமி
பெண் : இதழோரம் நகையாட இமையோரம் விழியாட
இளவேனிற் நிலவாடவே
கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட
கலை மானும் இணையாடவே
பெண் : இதழோரம் நகையாட இமையோரம் விழியாட
இளவேனிற் நிலவாடவே
கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட
கலை மானும் இணையாடவே
பெண் : நிழல் மேகமும் கூந்தலில் ஆடி வர
மணிமேகலை நூலிடை மூடி வர
இந்த மேனகை மேனியும் கோடி பெற
நவ மாமுனி சந்நிதி தேடி வர
திருவாய் மலர்ந்திட வேண்டும்…..ம்ம்ம்ம்….
பெண் : மௌனம் கலையாதோ சுவாமி
இது மழையை எதிர்ப்பார்த்து
மயங்கும் உடல் வேர்த்து
தணலாய் கொதிக்கின்ற பூமி….ஈ…….
பெண் : வசந்த காலங்கள் இதுபோல்
வாசல் தேடி வருமோ
நெஞ்சில் விளைந்த ஞானங்கள்
எனைப் போல் ராஜபோகம் தருமோ
பெண் : எழுந்து வாருங்கள் சுகங்கள் மேலும் மேலும் மலர
கண்ணை திறந்து பாருங்கள் எதிரில் தேவதேவி உலவ
பெண் : கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும்
கன்னி மயிலாடும் வேளையில் உள்ளம் உருகாதோ
வெள்ளம் பெருகாதோ ஒட்டி உறவாடும் லீலையில்
பெண் : தவத்தை கலைக்க வந்த தேவதை
தழுவி பொழிய வந்த தேன் மழை
உலகை மயக்கும் வண்ணப்பூனகை
உதட்டில் எடுத்து வந்த மேனகை……மேனகை…..மேனகை..