Singers : Hariharan and K. S. Chithra

Music by : Deva

Male : Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae
Enai marandhu endhan
Nizhal poghuthae

Male : {Ennil indru naanae illai
Kaadhal pola edhum illai} (2)
Engae endhan idhayam anbae
Vandhu sernthatha

Male : Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae

Female : Aaaaaa…..aaaaa…..aaaaa…..

Male : Nandhavanam idho ingae thaan
Naan endhan jeevanai nerinil paarthen
Nallavalae anbae unnaal thaan
Naalaigal meedhoru nambikai konden

Male : {Nodikkoru tharam unnai ninaika veithaai
Adikkadi enudal silirka veithaai} (2)
Mudhal paarvai nenjil endrum
Uyir vaazhumae uyir vaazhumae

Female : Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae

Female : Aaaaa…..aaaaa……aaaaa…….

Female : Ezhu swaram ettaai aahaatho
Naan konda kaadhalin aazhathai paada
Dhegam engum kangal thondraatho
Nee ennai paarkayil naanathai mooda

Female : {Irudhayam muraipadi thudikkavillai
Itharku mun enakkithu nigazhnthathillai} (2)
Naan kanda maatram ellaam
Nee thanthathu nee thanthathu

Female : Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae
Enai marandhu endhan
Nizhal poghuthae

Female : {Ennil indru naanae illai
Kaadhal pola edhum illai} (2)
Engae endhan idhayam anbae
Vandhu sernthatha…aaaa….

Female : Mudhan mudhalil paarthen
Kaadhal vandhathae
Enai marandhu endhan
Nizhal poghuthae

 

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

ஆண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்

ஆண் : { நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய் } (2)
முதல் பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : ஏழு ஸ்வரம்
எட்டாய் ஆகாதோ நான்
கொண்ட காதலின் ஆழத்தை
பாட தேகம் எங்கும் கண்கள்
தோன்றாதோ நீ என்னை
பார்க்கையில் நாணத்தை
மூட

பெண் : { இருதயம்
முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது
நிகழ்ந்ததில்லை } (2)
நான் கண்ட மாற்றம்
எல்லாம் நீ தந்தது நீ
தந்தது

பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே

பெண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா

பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here