Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Female : Mugathai paarthadhillai
Anbu mozhiyai kaettadhillai
Indha manadhai koduthadhillai
Idhil mayakkam vandhadhenna

Female : Mugathai paarthadhillai
Anbu mozhiyai kaettadhillai
Indha manadhai koduthadhillai
Idhil mayakkam vandhadhenna

Male : Sugathai paarthadhillai
Pirar sollaal kaettadhillai
Idhazh suvaiyai arindhadhillai
Idhil mayakkam vandhadhenna

Male : Sugathai paarthadhillai
Pirar sollaal kaettadhillai
Idhazh suvaiyai arindhadhillai
Idhil mayakkam vandhadhenna

Female : {Paadhi iravil thookkam vizhikkum
Paavam anal pol maeni kodhikkum} (2)

Male : {Arugilirukkum thunaiyai ezhuppum
Urangum thalaivan udalai thiruppum} (2)

Female : Mugathai
Male : Paarthadhillai
Female : Anbu mozhiyai
Male : Kaettadhillai
Female : Indha manadhai
Male : Koduthadhillai
Female : Idhil mayakkam
Male : Vandhadhenna

Female : {Thirandhu kidakkum kadhavai adaikkum
Eriyum vilakkin thiriyai kuraikkum} (2)

Male : {Mella nerunghum sollat thodangum
Mudhalil thayangum mudivil mayangum} (2)

Male : Sugathai
Female : Paarthadhillai
Male : Pirar sollaal
Female : Kaettadhillai
Male : Idhazh suvaiyai
Female : Arindhadhillai
Male : Idhil mayakkam
Female : Vandhadhenna

Female : {Mayakkam kalaiyum maunam nilavum
Kulirndha maeni kaattril ularum} (2)

Male : {Kalaippum thondrum kangal moodum
Kaalai vidindhaal neeril aadum} (2)

Both : Mugathai paarthadhillai
Anbu mozhiyai kaettadhillai
Indha manadhai koduthadhillai
Idhil mayakkam vandhadhenna

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

பெண் : முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

ஆண் : சுகத்தைப் பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

ஆண் : சுகத்தைப் பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

பெண் : {பாதி இரவில் தூக்கம் விழிக்கும்
பாவம் அனல் போல் மேனி கொதிக்கும்} (2)

ஆண் : {அருகிலிருக்கும் துணையை எழுப்பும்
உறங்கும் தலைவன் உடலைத் திருப்பும்} (2)

பெண் : முகத்தைப்
ஆண் : பார்த்ததில்லை
பெண் : அன்பு மொழியைக்
ஆண் : கேட்டதில்லை
பெண் : இந்த மனதைக்
ஆண் : கொடுத்ததில்லை
பெண் : இதில் மயக்கம்
ஆண் : வந்ததென்ன

பெண் : {திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்
எரியும் விளக்கின் திரியைக் குறைக்கும்} (2)

ஆண் : {மெல்ல நெருங்கும் சொல்லத் தொடங்கும்
முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்} (2)

ஆண் : சுகத்தைப்
பெண் : பார்த்ததில்லை
ஆண் : பிறர் சொல்லால்
பெண் : கேட்டதில்லை
ஆண் : இதழ் சுவையை
பெண் : அறிந்ததில்லை
ஆண் : இதில் மயக்கம்
பெண் : வந்ததென்ன

பெண் : {மயக்கம் கலையும் மௌனம் நிலவும்
குளிர்ந்த மேனி காற்றில் உலரும்} (2)

ஆண் : {களைப்பும் தோன்றும் கண்கள் மூடும்
காலை விடிந்தால் நீரில் ஆடும்} (2)

இருவர் : முகத்தைப் பார்த்ததில்லை
அன்பு மொழியைக் கேட்டதில்லை
இந்த மனதைக் கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here