Singer : P. Bhanumathi

Music by : M. S. Viswanathan

Lyrics by : Aalangudi Somu

Female : Murugaa varuga nalamae tharuga
Muruga enakkoru varam vendum
En peranaaga nee vanthu piranthida vendum
Muruga enakkoru varam vendum
En peranaaga nee vanthu piranthida vendum

Female : Pooppola unnai naan neeraatta vendum
Pottu vaiththu maiyezhuthu seeraatta vendum
Pooppola unnai naan neeraatta vendum
Pottu vaiththu maiyezhuthu seeraatta vendum
Paalodu thaen kalanthu naan ootta vendum
Paramparaiyin per vilanga
Vazhi kaatta vendum

Female : Muruga enakkoru varam vendum
En peranaaga nee vanthu piranthida vendum

Female : Seerudai anainthu neeyum
Palli sella vendum
Senthamizhin yaededuththu
Kalvi theda vendum

Female : Seerudai anainthu neeyum
Palli sella vendum
Senthamizhin yaededuththu
Kalvi theda vendum

Female : Ooraargal pugazh paada
Pattam vaanga vendum
Nee uyarnthu varum perumaiyil
Naan uyir vaazha vendum

Female : Muruga enakkoru varam vendum
En peranaaga nee vanthu piranthida vendum

Female : Kuramagal valliyin thalirmaeni azhagum
Arul tharum nangaiyaam
Dheivayaanai nyaanamum
Kuramagal valliyin thalirmaeni azhagum
Arul tharum nangaiyaam
Dheivayaanai nyaanamum

Female : Marumagalaai vanthu maalaiyida vendum
Antha thirukolam kandu
Naan magizhnthaada vendum

Female : Muruga enakkoru varam vendum
En peranaaga nee vanthu piranthida vendum
En peranaaga nee vanthu piranthida vendum

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : முருகா வருக நலமே தருக
முருகா எனக்கொரு வரம் வேண்டும்
என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்
முருகா எனக்கொரு வரம் வேண்டும்
என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்

பெண் : பூப்போல உன்னை நான் நீராட்ட வேண்டும்
பொட்டு வைத்து மையெழுதி சீராட்ட வேண்டும்
பூப்போல உன்னை நான் நீராட்ட வேண்டும்
பொட்டு வைத்து மையெழுதி சீராட்ட வேண்டும்
பாலோடு தேன் கலந்து நான் ஊட்ட வேண்டும்
பரம்பரையின் பேர் விளங்க
வழிக் காட்ட வேண்டும்

பெண் : முருகா எனக்கொரு வரம் வேண்டும்
என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்

பெண் : சீருடை அணிந்து நீயும்
பள்ளிச் செல்ல வேண்டும்
செந்தமிழின் ஏடெடுத்து
கல்வித் தேட வேண்டும்

பெண் : சீருடை அணிந்து நீயும்
பள்ளிச் செல்ல வேண்டும்
செந்தமிழின் ஏடெடுத்து
கல்வித் தேட வேண்டும்

பெண் : ஊரார்கள் புகழ் பாட
பட்டம் வாங்க வேண்டும்
நீ உயர்ந்து வரும் பெருமையில்
நான் உயிர் வாழ வேண்டும்

பெண் : முருகா எனக்கொரு வரம் வேண்டும்
என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்

பெண் : குறமகள் வள்ளியின் தளிர்மேனி அழகும்
அருள் தரும் நங்கையாம்
தெய்வயானை ஞானமும்
குறமகள் வள்ளியின் தளிர்மேனி அழகும்
அருள் தரும் நங்கையாம்
தெய்வயானை ஞானமும்

பெண் : மருமகளாய் வந்து மாலையிட வேண்டும்
அந்த திருக்கோலம் கண்டு
நான் மகிழ்ந்தாட வேண்டும்……..

பெண் : முருகா எனக்கொரு வரம் வேண்டும்
என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்
என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here