Singers : T. M. Soundarajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female : Muthamizh sondhangal ethanai sandhangal
Muthamizh sondhangal ethanai sandhangal
Kavidhai varum kalai vannangal
Male : Sithira kannangal sandhana kinnangal
Sithira kannangal sandhana kinnangal
Parugida varum pala ennangal
Parugida varum pala ennangal

Male : Sithira kannangal sandhana kinnangal
Parugida varum pala ennangal

Male : Mogam oru dhaagam
Adhai theerkkum malai mugile
Ezhai mana yazhai dhinam
Meettum valai karamae

Female : Menmai indha penmai
Idhai kaakum malar kanaiye
Indrum ini endrum
Enai thaangum uyir thunaiyae

Male : Madhulai muthukkal
Malligai mottukkal
Parthen madi serthaen

Female : Maavilai pandhalgal
Mangala melangal
Kaanum nilai venum
Kaanum nilai venum

Female : Muthamizh sondhangal ethanai sandhangal
Kavidhai varum kalai vannangal

Female : Pongum alai suzhalum
Thathi thaavum karai thazhuva
Maalai indha velai
Thanga manalil kadhai eludha

Male : Ponnae siru poovae
Kadal neeyoo karai naanoo
Thullum kadhai sollum
Vizhi meenoo ila maano

Female : Kandathum ennenna
Karpanai ammamma
Naalum manam naanum

Male : Kaadhalil ellorum
Kambanin pillaithaan
Kanden thamizh pennae
Kannae thamizh pennae

Female : Muthamizh sondhangal ethanai sandhangal
Kavidhai varum kalai vannangal

Male : Sithira kannangal sandhana kinnangal
Parugida varum pala ennangal
Parugida varum pala ennangal

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள்
முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள்
கவிதை வரும் கலை வண்ணங்கள்

ஆண் : சித்திர கன்னங்கள் சந்தனக் கிண்ணங்கள்
சித்திர கன்னங்கள் சந்தனக் கிண்ணங்கள்
பருகிட வரும் பல எண்ணங்கள்.
பருகிட வரும் பல எண்ணங்கள்….

ஆண் : சித்திர கன்னங்கள் சந்தனக் கிண்ணங்கள்
பருகிட வரும் பல எண்ணங்கள்.

ஆண் : மோகம் ஒரு தாகம்
அதை தீர்க்கும் மலை முகிலே
ஏழை மன யாழை தினம்
மீட்டும் வலை கரமே

பெண் : மேன்மை இந்த பெண்மை
இதை காக்கும் மலர் கனையே
இன்றும் இனி என்றும்
எனை தாங்கும் உயிர் துணையே

ஆண் : மாதுளை முத்துக்கள்
மல்லீகை மொட்டுகள்
பார்த்தேன் மடி சேர்த்தேன்

பெண் : மாவிலை பந்தல்கள்
மங்கள மேளங்கள்
காணும் நிலை வேணும்
காணும் நிலை வேணும்

பெண் : முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள்
கவிதை வரும் கலை வண்ணங்கள்

பெண் : பொங்கும் அலை சுழலும்
தத்தி தாவும் கரை தழுவ
மாலை இந்த வேளை
தங்க மணலில் கதை எழுத

ஆண் : பொன்னே சிறு பூவே
கடல் நீயோ கரை நானோ
துள்ளும் கதை சொல்லும்
விழி மீனோ இள மானோ

பெண் : கண்டதும் என்னென்ன
கற்பனை அம்மம்மா
நாளும் மனம் நாணும்

ஆண் : காதலில் எல்லோரும்
கம்பனின் பிள்ளைதான்
கண்டேன் தமிழ் பெண்ணே
கண்ணே தமிழ் பெண்ணே..

பெண் : முத்தமிழ் சொந்தங்கள் எத்தனை சந்தங்கள்
கவிதை வரும் கலை வண்ணங்கள்

ஆண் : சித்திர கன்னங்கள் சந்தனக் கிண்ணங்கள்
பருகிட வரும் பல எண்ணங்கள்.
பருகிட வரும் பல எண்ணங்கள்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here