Singer : S. Janaki
Music by : M. S. Vishwanathan
Female : Muthumani kannanukku
Enna nenaippu
Muthumani kannanukku
Enna nenaippu
Mullai mottupol vandhadhenna sirippu
Pathu viral naadagathil enna nadippu
Pattu vanna poo mugathil enna kurippu
Female : Muthumani kannanukku
Enna nenaippu
Female : Thallaadum nilaiyil
Thaai maaman madiyil
Thaanaaga padippadhu tamil padippu
Ammavendraadi appavendroodi
Anaippadhilae unakkenna thudippu
Female : Thaayaarum thanthaiyum
Ondraaga irupadhai
Paaraamal paarpadhil enna kalippu
Thandhai pallaakku thookka
Vaippadhenna kurumbu
Female : Muthumani kannanukku
Enna nenaippu
Female : Appaavai polae valarnthu vittaanae
Amma un magan ena oor uraikkum
Ammaanin magalin ponmaanai polae
Pennaaga valarnthu mella sirikkum
Female : Pon oonjal aadidum
Kalyaana kolathil
Pennodu maapillai pakkam irukkum
Aaaa..aaa….aa….aa….aaa….aa….aaa…
Female : Kanneeril aadidum thaai thandhai kaalgalil
Nal vaazhthu kettandha ullam vanangum
Aaa..aaa….aa….aa….aaa….aa….aaa…
Female : Muthumani kannanukku
Enna nenaippu
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன்
பெண் : முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
முல்லை மொட்டுப்போல் வந்ததென்ன சிரிப்பு
பத்து விரல் நாடகத்தில் என்ன நடிப்பு
பட்டு வண்ணப் பூமுகத்தில் என்ன குறிப்பு
பெண் : முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
பெண் : தள்ளாடும் நிலையில் தாய்மாமன் மடியில்
தானாகப் படிப்பது தமிழ்ப் படிப்பு
அம்மாவென்றாடி அப்பாவென்றோடி
அணைப்பதிலே உனக்கென்ன துடிப்பு
பெண் : தாயாரும் தந்தையும் ஒன்றாக இருப்பதை
பாராமல் பார்ப்பதில் என்ன களிப்பு
தந்தை பல்லாக்குத் தூக்க வைப்பதென்ன குறும்பு
பெண் : முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
பெண் : அப்பாவைப்போலே வளர்ந்து விட்டானே
அம்மா உன் மகன் என ஊர் உரைக்கும்
அம்மானின் மகளும் பொன்மானைப் போலே
பெண்ணாக வளர்ந்து மெல்லச் சிரிக்கும்
பெண் : பொன் ஊஞ்சல் ஆடிடும் கல்யாணக் கோலத்தில்
பெண்ணோடு மாப்பிள்ளை பக்கமிருக்கும்
ஆஅ…ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…
பெண் : கண்ணீரில் ஆடிடும் தாய் தந்தை கால்களில்
நல்வாழ்த்துக் கேட்டந்த உள்ளம் வணங்கும்
ஆ……ஆ……..ஆ…….ஆ……ஆ……ஆ……..
பெண் : முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு