Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Mutrathu maada puraa
Kaadhalukku thoodhonnu poi varumaa
Mutrathu maada puraa
Kaadhalukku thoodhonnu poi varumaa
Sokkura em manasa
Maamanukku kaadhula odhidumaa
Mutha mazhaiyinil aadai katta
Mundhiri thoppinil vaeli katta
Thaamadham yaen endru keladi thaali katta oo oo…

Male : Mutrathu maada puraa
Kaadhalukku thoodhonnu poi varumaa
Sokkura em manasa
Sundharikku kaadhula odhidumaa

Chorus : Thandhadhat thamdham thandhadhat thamdham
Thandhadhat thamdham thandhadhat tham
Thandhadhat thamdham thandhadhat thamdham
Thandhadhat thamdham thandhadhat tham

Female : Kattalaikku dhinam kattup padugira
Kattazhagi enakku
Un kattu kadhai edharkku oho

Chorus : {Oho

Female : Oho } (5)

Female : Thottu thazhuvida sutri varugira
Katti karumbunakku
Veen acham ini edharkku

Male : Neerukkum vaerukkum
Baedham illai
Vaeredhum naan paesa vaarthai illai

Female : Aaruyir kaavalanae
Un kaaval thaedi thaan
Thaeyudhu vaan piraiyae

Male : Aadidum kaaviriyae
Nee vandhu kooda thaan
Paadudhu vaalibamae

Female : Vaa vaadidudhae vaasa mullai
Nee thoda thaamadham yen

Male : Mutrathu maada puraa
Kaadhalukku thoodhonnu poi varumaa
Sokkura em manasa
Sundharikku kaadhula odhidumaa

Male : Vetkam varugaiyil pathu nilavena
Vatta mugam sivakka andha vetti nilavedharkku

Female : {Oho

Chorus : Oho} (5)

Male : Mutha kadalukkum
Muthu kulithida
Thittam itta piragum veen vetti kadhai edharkku

Female : Raamanum seethaikku maalai ida
Mandhiram sollidum vaelai idhu

Male : Kaeladi thaamaraiyae
Un naanam kaana thaan
Vaazhndhidum sooriyanae

Female : Aanandha sooriyanae
Unnodu saera thaan
Pootthidum thaamaraiyae

Male : Naan ennai ingae thandhu vitten
Nambudee sundhariyae

Female : Mutrathu maada puraa
Kaadhalukku thoodhonnu poi varumaa
Sokkura em manasa
Maamanukku kaadhula odhidumaa

Male : Mutha mazhaiyinil aadai katta
Mundhiri thoppinil vaeli katta
Nitham thavikkira chittukku thaali katta oo…

Female : Mutrathu maada puraa
Kaadhalukku thoodhonnu poi varumaa

Male : Sokkura em manasa
Sundharikku kaadhula odhidumaa

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : முச்சத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
முச்சத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
சொக்குற எம் மனச
மாமனுக்கு காதுல ஓதிடுமா
முத்த மழையினில் ஆடை கட்ட
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட
தாமதம் ஏன் என்று கேளடி தாலி கட்ட ஓ…

ஆண் : முற்றத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
சொக்குற எம் மனச
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா

குழு : தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்
தந்ததத் தம்தம் தந்ததத் தம்
தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்
தந்ததத் தம்தம் தந்ததத் தம்

பெண் : கட்டளைக்கு தினம் கட்டுப்படுகிற
கட்டழகி எனக்கு
உன் கட்டுக் கதை எதற்கு ஓஹொ

குழு : {ஓஹொ

பெண் : ஓஹொ} (5)

பெண் : தொட்டுத் தழுவிட சுற்றி வருகிற
கட்டிக் கரும்புனக்கு
வீண் அச்சம் இனி எதற்கு

ஆண் : நீருக்கும் வேருக்கும்
பேதம் இல்லை
வேறெதும் நான் பேச வார்த்தை இல்லை

பெண் : ஆருயிர் காவலனே
உன் காவல் தேடித்தான்
தேயுது வான் பிறையே

ஆண் : ஆடிடும் காவிரியே
நீ வந்து கூடத்தான்
பாடுது வாலிபமே

பெண் : வா வாடிடுதே
வாச முல்லை
நீ தொடத் தாமதம் ஏன்

ஆண் : ஓ முற்றத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
சொக்குற எம் மனச
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா

ஆண் : வெட்கம் வருகையில் பத்து நிலவென
வட்ட முகம் சிவக்க அந்த வெட்டி நிலவெதற்கு

பெண் : {ஓஹொ

குழு : ஓஹொ} (5)

ஆண் : முத்தக் கடலுக்குள்
முத்துக் குளித்திட திட்டம் இட்ட பிறகு
வீண் வெட்டிக் கதை எதற்கு

பெண் : ராமனும் சீதைக்கு மாலை இட
மந்திரம் சொல்லிடும் வேளை எது

ஆண் : கேளடி தாமரையே
உன் நாணம் காணத்தான்
வாழ்ந்திடும் சூரியனே

பெண் : ஆனந்த சூரியனே
உன்னோடு சேரத்தான்
பூத்திடும் தாமரையே

ஆண் : நான் என்னை இங்கே தந்து விட்டேன்
நம்புடீ சுந்தரியே

பெண் : முச்சத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா
சொக்குற எம் மனச
மாமனுக்கு காதுல ஓதிடுமா

ஆண் : முத்த மழையினில் ஆடை கட்ட
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட
நித்தம் தவிக்கிற சிட்டுக்குத் தாலி கட்ட ஓ…

பெண் : முச்சத்து மாடப் புறா
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா

ஆண் : சொக்குற எம் மனச
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here