Singer : S. P. Balasubrahmanyam

Music by :  Agosh (R. Anand, Gopal Rao and Shaleen)

Whistling : …………………..

Male : Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam

Male : Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam

Male : Irubathu vayathil
Varuvathuthaana kaadhal
Arubathu varaiyil
Thodarvathuthanae kaadhal

Male : Sirikira pothu
Siripathuthaana kaadhal
Azhugira pothu
Aaruthalthaanae kaadhal hey

Male : Kaadhalai naan paadava
Poovilae thaen thedava
Kaadhalai naan paadava heyyy..
Poovilae thaen thedava

Male : Kannai mella moodi
Saainthukkollumbothu
Madiyaaga vendumae
Thattuthadumaari
Sornthu vizhum bothu
Pidiyaaga vendumae

Male : Un ullam naan kandu
En ullam nee kandu
Unakaaga naan undu
Endru vaazhum
Kaadhalthaanae kaadhal

Male : Malarvittu malarai
Thavuvathalla kaadhal
Oruthikku oruvan
Enbathu thaanae kaadhal heyy..

Male : Kaadhalai naan paadava
Poovilae thaen thedava

Male : Ey..ey..ey..
Thanthana thane thananae
Hey..thanthana thane thananae

Male : Gangai nadhi enna
Kaveri enna
Ellamae penmaiyae
Nammai ingu naalum
Thangugira boomi
Athukooda penmaiyae

Male : Naadaalum aanukkum
Veedaala pen vendum
Kadal pondra vaazhvinil
Kalangarai vilakkam thaanae penmai

Male : Pennidam manadhai
Koduthuvittaalae pothum
Pournamithaanae
Vaazhvil entha naalum hey

Male : Kaadhalai naan paadava
Poovilae thaen thedava

Male : Nadodi paattu paada
Thanthana thanthana thaalam
Naadengum kaadhalaalae
Nenjinil aayiram thaalam

Whistling : ……………………………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : அகோஷ்

(ஆர். ஆனந்த், கோபால் ராவ் மற்றும் ஷலீன் சர்மா)

விசில் : ……………………..

ஆண் : நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்

ஆண் : நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்

ஆண் : இருபது வயதில்
வருவது தானா காதல்
அறுபது வரையில்
தொடர்வது தானே காதல்

ஆண் : சிரிக்கிற போது
சிரிப்பது தானா காதல்
அழுகிற போது
ஆறுதல் தானே காதல் ஹேய்

ஆண் : காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹேய்
பூவிலே தேன் தேடவா

ஆண் : கண்ணை மெல்ல மூடி
சாய்ந்துகொள்ளும் போது
மடியாக வேண்டுமே
தட்டுதடுமாறி
சோர்ந்து விழும் போது
பிடியாக வேண்டுமே

ஆண் : உன் உள்ளம் நான் கண்டு
என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு
என்று வாழும்
காதல் தானே காதல்

ஆண் : மலர் விட்டு மலரை
தாவுவதான் அல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன்
என்பது தானே காதல் ஹேய்…..

ஆண் : காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா

ஆண் : ஏ……ஏ…..ஏ….
தந்தன தானே தானனே
ஹேய் …..தந்தன தானே தானனே

ஆண் : கங்கை நதி என்ன
காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும்
தங்குகிற பூமி
அது கூட பெண்மையே

ஆண் : நாடாளும் ஆணுக்கும்
வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம் தானே பெண்மை

ஆண் : பெண்ணிடம் மனதை
கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமிதானே
வாழ்வில் எந்த நாளும் ஹேய்

ஆண் : காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா

ஆண் : நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்

விசில் : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here